sun tv Ethirneechal Serial Today Episode Written Update April 15 special promo | Ethirneechal serial : அஞ்சனா


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் குணசேகரன் மற்றும் உமையாள் ஒரு பக்கம் மாப்பிள்ளை சித்தார்த் இல்லாமலேயே தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகளை மிகவும் மும்மரமாக செய்து வருகிறார்கள். மறுபக்கம் கதிர் சித்துவை கடத்தி வைத்திருக்க சக்தியை பின்தொடர்ந்து சென்று சித்து இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறான் கரிகாலன்.
ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமிக்கு போன் மூலம் சித்துவை ஒப்படைக்க பேரம் பேசுகிறான். சக்தியிடம் இருந்து சித்துவை கடத்தி விடுகிறான் கரிகாலன்.  
தனக்கு ஆதரவாக இருக்கும் அனைவரையும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒதுக்கிவிட்டு அப்பா குணசேகரன் பக்கம் தர்ஷினி செல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக எதிர்நீச்சல் கதைக்களம் நகர்ந்து வரும் நிலையில் இந்த வாரத்திற்கான எதிர்நீச்சல் ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. சித்துவை எப்படியோ கதிரும் சக்தியும் சேர்ந்து மீட்க, ஜனனி அஞ்சனாவையும் அவளின் அம்மாவையும் ராமசாமி ஆட்களிடம் காப்பாற்ற உதவுகிறார்கள் ஞானம், நந்தினி மற்றும் ரேணுகா. அஞ்சனாவுக்கும் சித்துவுக்கும் அவசர அவரசமாக ரகசிய திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள் ஜனனி டீம்.நந்தினி பதற்றத்துடன் ஜனனிக்கு  போன் செய்து “நேரமாகுது எப்போ கிளம்ப போறோம்?” என கேட்க “மாப்பிள்ளையை ரெடி பண்ணிட்டாங்க. பொண்ணும் ரெடியா தான் இருக்கா. சரியான நேரம் பார்த்து இங்க இருந்து கிளம்பிவிட வேண்டியது தான்” என ஜனனி சொல்கிறாள். “சரியான நேரமா? அது எங்க இங்க இருக்கு. அவர் தான் அய்யனார் கணக்கா கூடத்திலேயே உட்கார்ந்துகிட்டு இருக்காரே. அரிவாள் ஒன்னு தான் மிஸ்ஸிங்” என பதற்றத்துடன் சொல்ல மிகவும் கூலாக “அக்கா அவர் இருக்கும்போதே தான் கிளம்புறோம்” என ஜனனி சொன்னதும் நந்தினிக்கு ஒரே ஷாக்காக இருக்கிறது. இதுதான் இந்த வாரத்திற்கான எதிர்நீச்சல் கதைக்களம் என்பதை ஸ்பெஷல் ப்ரோமோ மூலம் ரசிகர்களின் ஆர்வத்தை எகிற வைத்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இப்படி தான் பலமான ஏற்பாடுகளுடன் ஆதிரைக்கும் அருணுக்கும்  திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தனர். கடைசியில் குணசேகரன் அந்த பிளானை முற்றிலுமாக மாற்றினார். தற்போது அஞ்சனா – சித்தார்த் திருமண ஏற்பாடுகளும் அதே ரேஞ்சுக்கு மிகவும் விறுவிறுப்பாக ரகசியமாக நடைபெற்று வருகிறது. இந்த ட்விஸ்ட் எந்த அளவுக்கு வெற்றி பெறும்? குணசேகரன் மூக்கு உடையுமா? இந்த திருமணம் என்ற சவால் மூலம் ஜெயிக்கப்போவது ஜனனியா அல்லது குணசேகரனா? என்பதை பொறுத்து இருந்து வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுகளில் பார்க்கலாம். 

மேலும் காண

Source link