Siragadikka Aasai: அப்பா வராததால் அசிங்கப்பட்ட ரோகிணி.. குடும்பத்தைப் பிரிக்க திட்டம் – சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

”மீனா முத்து எங்கமா” என அண்ணாமலை கேட்கிறார். பின் மீனா முத்துவை தேடுகிறார். ”என்ன ரோகிணி உன் அப்பா இன்னும் காணும்?” எனக் கேட்கிறார். “கால் பண்ணா போகல ஆண்டி” என்கிறார். ”என்ன பார்த்தா கேனச்சி மாதிரி தெரியுதா?” என விஜயா கேட்கிறார். ”வரமாட்டாருனா சொல்லி தொலைக்க வேண்டியது தானே. அவரு வராம மட்டும் இருக்கட்டும் அப்புறம் உனக்கு இருக்கு” என விஜயா சொல்கிறார்.

”முத்து குடிக்க ஆரம்பிச்சிட்டான், எப்போ வேணும்னாலும் பிரச்சனை வரலாம். நீ பயப்படாத” என வித்யா சொல்கிறார். அண்ணாமலையும், மீனாவும் முத்துவை தேடுகின்றனர். ”என் பொண்டாட்டி கிட்ட என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு வாக்கு குடுத்து இருக்கேன்” என முத்து மயில் பாண்டியிடம் சொல்கிறார். இதை மீனா பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் மீனா முத்துவை கூட்டிச் செல்கிறார்.

ரோகிணியோட அப்பா எங்கே என்று முத்து கேட்கிறார். அதற்கு அண்ணாமலை வரவில்லை என சொல்கிறார். ”அந்த பார்லர் அம்மா ஒரு கேடிப்பா ரீல் சுத்துது” என முத்து சொல்கிறார். உண்மை தெரியாம நாம எதுவும் பேசக்கூடாது என அண்ணாமலை சொல்கிறார். ”சடங்கு முடிஞ்சிடுச்சி இன்னும் உன் அப்பா வர்ல”  இதுவரைக்கும் உன் அப்பா வரல, இதுக்கப்புறம் உன் அறுபதாம் கல்யாணத்துக்கு தான் வருவாரா?” என விஜயா கேட்கிறார்.

”இல்ல அங்கிள் என் அப்பா ஏன் இதுவரைக்கும் வரலைனு எனக்கு தெரியல” எனக் கூறி “நீங்க தான் அப்பா, அம்மாவா இருந்து எனக்கு ஆசிர்வாதம் பண்ணனும்” என்று சொல்லி ரோகிணி அவரிகளின் காலில் விழுகிறார். ரோகிணி விஜயா பேசுவதைக் கேட்டு அழுகிறார். ”இதுக்கு தான் சொன்னே பங்ஷன் நடக்கும் போதே பிரச்சனை நடக்கணும்னு. அந்த முத்து என்ன அமைதியா உட்கார்ந்துக்கிட்டு இருக்கான்” என ரோகிணி கேட்கிறார். மண்டபத்துல இருந்து போறதுக்குள்ள சண்டை வரும் என வித்யா சொல்கிறார்.

வித்யா முத்துவை ஏன் குடிக்க வைக்கவில்லை எனக் கேட்டு மயில் பாண்டியை திட்டுகிறார். “இதுக்கப்புறம் முத்துவால பிரச்சனை வர வைக்க முடியாதுனு நினைக்குறேன்” என்கிறார் விஜயா. ”கொஞ்சம் கொஞ்சமா மனோஜ் என் பேச்சை கேட்குற மாதிரி மாத்தணும், அதான் எனக்கும் நல்லது” என ரோகிணி சொல்கிறார். ”இனிமேலும் குடும்பம் ஒத்துமைனு பார்த்துக்கிட்டு இருக்காதே அவரை தனியே கூட்டிக்கிட்டு போற வழிய பாரு. அதான் உனக்கு நல்லது” என வித்யா கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Source link