Morning Headlines: இன்று நெல்லையில் முதலமைச்சர் பிரச்சாரம்.. வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்.. முக்கியச் செய்திகள்..

”தென் தமிழ்நாட்டிலும் உங்கள் ஸ்டாலின் குரல்..” இன்று நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அதிமுக கட்சி தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

பிரதமருக்கு, மிஸ்டர் 28 பைசா என செல்ல பெயர் வைக்க வேண்டும்.. பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி

தி.மு.க., கூட்டணியில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில் " 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒத்த செங்கலையும் நான் எடுத்துச் சென்று விட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கினால் தான் ஒத்த செங்கலை நான் திருப்பித் தருவேன்.

சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை – இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்னும் 3 நாட்களில் முடிவடைய உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ம் தேதியே தொடங்கியது. ஆனால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் இன்னும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இன்று முதல் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

"யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது.. மனசுல பட்டதை பேசுவோம்" பொங்கி எழுந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

உக்ரைன் மீது ரஷியாவும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேலும் போர் நடத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த இரண்டு போர்களும் உலகில் பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Source link