MI vs RCB Innings Highlights: இறுதியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; மும்பைக்கு 197 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணி முதலில் பந்து வீசும் என முடிவெடுத்தார்.

அதன்படி பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் கோலி மற்றும் டூ பிளெசிஸ் தொடங்கினர். நிதானமாக ஆடி வந்த இந்த கூட்டணியை மூன்றாவது ஓவரில் பும்ரா பிரித்தார். பும்ரா பந்தில் விக்கெட்டினை மூன்று ரன்கள் சேர்த்தபோது தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த வில் ஜாக்ஸ் அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை விளாச, பெங்களூரு அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் மத்வால் வீசிய 4வது ஓவரிலேயே தனது விக்கெட்டினை எட்டு ரன்களில் இழந்து வெளியேறினார். இதனால் பவர்ப்ளேவில் மும்பை அணியின் கரங்கள் ஓங்கியது. இதனால் பெங்களூரு அணி நிதானமாகவே ஆடியது. பவர்ப்ளேவில் வீசப்பட்ட 36 பந்துகளில் பெங்களூரு அணி 20 பந்துகளில் ரன்களே எடுக்கவில்லை. மீதமுள்ள 16 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்திருந்தது.

நம்பிக்கை கொடுத்த டூ ப்ளெசி – ரஜித் படிதார்

இரண்டு விக்கெட்டுகளை இழந்த பின்னர் டூ பிளெசியுடன் இணைந்த ரஜித் படிதார் அணியின் நிலையை உணர்ந்து பொறுப்பாகவும் சிறப்பாகவும் விளையாடினார். இதனால், பெங்களூரு அணிக்கு ரன்ரேட் சீராக உயர ஆரம்பித்தது. இவர்கள் கூட்டணி 30 பந்தில் 50 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலையை நோக்கி முன்னேற்ற உதவியது. குறிப்பாக தொடக்க வீரரும் கேப்டனுமான டூ ப்ளெசி பவுண்டரிகள் விளாசுவதில் கவனம் செலுத்தி வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் படிதாரும் அதிரடியில் கவனம் செலுத்த பெங்களூரின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. போட்டியின் 12வது ஓவரில் ரஜித் படிதார் இரண்டு சிக்ஸர்கள் விளாசி அரைசதத்தினை எட்டியவர், அடுத்த பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் தனது சொதப்பல் ஆட்டத்தினை வெளிப்படுத்த, 13வது ஓவரில் ஸ்ரேயஸ் கோபால் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும், தொடக்க வீரராக களமிறங்கிய டூ ப்ளெசி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாடி வந்தார்.

பொறுப்பான ஆட்டத்தினால் அரைசதம் கடந்த டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை பும்ரா வீசிய 17வது ஓவரில் 61 ரன்களுக்கு தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்த வந்த லோம்ரோர் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதியில் பெங்களூரு அணி ரன்கள் 196 ரன்கள் குவித்தது.

Source link