இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு இடத்திலும் தேர்தல் நடத்தை விதிமீறல் கண்டறியப்பட்டால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேர்தல் பணிக்கென 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 1800425 7047 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புகாண்டு புகாரளிக்கலாம்.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கான தெர்தல் நடைபெற உள்ளது.

பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்ய 3 பறக்கும் படை குழு

தேர்தல் பணிக்காண இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உரிய ஆவணங்களின்றி பொதுமக்களால் எடுத்து செல்லும் ரூ50,000க்கும் மேற்பட்ட ரொக்கப் பணம் மற்றும் ரூ10,000-க்கும் மெற்பட்ட மதிப்பிலான பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் 3 கட்டப் பணி மாற்று சுழற்சி (Shift) முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில் பறக்கும்படை குழு (Flying Squad Team) மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ( Statistic Survillance Team) அமைக்கப்பட்டுள்ளன அதாவது இக்குழுக்கள் அனைத்தும் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை பணி மாற்று சுழற்சியில் (Shift) செயல்படும்.

தேர்தல் நடத்தை விதிமீறல் கண்டறியப்பட்டால் புகார் அளிக்க எண்

இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு இடத்திலும் தேர்தல் நடத்தை விதிமீறல் கண்டறியப்பட்டால் அதுகுறித்து பொதுமக்கள் எளிதில் C-Vigil என்ற மொபைல் செயலி (Mobile App) வழியாக காணொளி (Video) மற்றும் புகைப்படத்துடன் (Photograph) வழியாக புகாரினை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேர்தல் பணிக்கென 24 மணி நேரமும் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களை 1800425 7047 என்ற கட்டணமில்லா தொலைபெசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புகாண்டு உங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளை ஏற்கும் வகையில் இக்கட்டணமில்லா தொலைபேசியுடன் கூடுதலாக 4 துணை இணைப்புகள் (LINE – HUNTING) வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.