Lok sabha election 2024 ntk chief seeman scolded cadre who interrupts speech for selfie | Seeman NTK: செல்ஃபி கேட்டு ஷாக் கொடுத்த தம்பி


Seeman NTK: மக்களவை தேர்தல் பரப்புரையின் போது சீமானுடன் செல்ஃபி எடுப்பதற்காக, திடீரென மேடையேறிய தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் பரப்புரை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தலா 20 ஆண் மற்றும் 20 பெண்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பனின் மகள் வித்யா, நாம் தமிழர் கட்ச் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.

”முட்டாப்பய… முட்டாப்பய” கடுப்பாகி கத்திய சீமான்#Seeman #NTK #LokSabhaElections2024 #ViralVideo pic.twitter.com/HodAddZHTz
— ABP Nadu (@abpnadu) April 8, 2024

செல்ஃபிக்காக மேடையேறிய தொண்டர்:
வித்யாவை ஆதரித்தும், அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் எனவும் சீமான் ஆவேசமாக பேசினார். சினிமா பாடல் ஒன்றின் வரிகளை மாற்றி பாடியும், தங்களது சின்னமான மைக் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். வேட்பாளர் வித்யாவும் உடனிருந்தார். அப்போது திடீரென மேடையேறிய இளைஞர், தனது செல்ஃபோனில் சீமானுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார். இதை கண்ட சீமான், அவரது செல்ஃபோனை வெடுக்கென பிடுங்கினார். பாதுகாப்பு வளையத்தை மீறி ஒருவர் மேடையேறியத கண்டதும், அங்கிருந்து நிர்வாகிகள் உடனடியாக சென்று அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது, “அண்ணா ஒரே ஒரு செல்ஃபினா” என அந்த நபர் முறையிட்டார். 
இதையும் படிங்க: அம்மா திமுக கூட்டணி; மகள் நாம் தமிழர்: வீரப்பன் குடும்பத்தில் விரிசலா?: விளக்கம் அளித்த தாய் – சேய்
கடுப்பாகி திட்டிய சீமான்:
அந்த இளைஞரை நிர்வாகிகள் கீழே இழுத்துச் செல்ல அவரது செல்ஃபோனவை, சீமான் அவரிடமே தூக்கி எறிந்தார். மேலும் கடுகடுத்த முகத்துடன் ”முட்டாப்பய, முட்டாப்பய.. அவன் பிரச்னை அவனுக்கு, ஃபோட்டு எடுக்குறதுக்கு.. கிறுக்குப்பய” என கடிந்துகொண்டார். இந்த நிகழ்வால் மேடையில் சிறிது நேரம் பதற்றம் தொற்றிக் கொண்டது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் காண

Source link