விழுப்புரம்: விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20.03.2024 தேதி முதல் 27.03.2024 வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுத்தாக்கலின் போது விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிட மொத்தமாக 31 பேர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை 28 ஆம் தேதி நடைபெற்றபோது பல்வேறு காரணங்களுக்காக 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 18 மனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், வேட்பு மனு திரும்ப பெறுவதற்கு இன்றைய தினம் 30.03.24 அனுமதிக்கபட்டிருந்த நிலையில் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த ஒருவர் மட்டும் மனுவை திரும்ப பெற்றதால் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் உள்ள விசிக சார்பில் போட்டியிடும் துரை ரவிக்குமாருக்கு பானை சின்னமும், அதிமுக சார்பில் போட்டியிடும் பாக்கியராஜ்க்கு இரட்டை சின்னமும், பாமக சார்பில் போட்டியிடும் முரளி சங்கருக்கு மாம்பழ சின்னமும், நாம் தமிழர் வேட்பாளர் களஞ்சியத்திற்கு ஒலி வாங்கி மைக் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே சின்னத்தை இருவர் கோரி இருந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பழனி குழுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தனர்.