IPL 2024 Mumbai Indians never won their first match of the IPL since 2013 | MI IPL 2024: 5 கப் அடித்த மும்பைக்கு 11 வருடங்களாக தொடரும் சோகம்


MI, IPL 2024: ஐ.பி.எல். தொடரில் கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல், மும்பை அணி தவித்து வருகிறது.
மும்பை அணி:
ஐ.பி.எல். தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்றது, தொடர்ந்து எல்லா சீசன்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என பல்வேறு சாதனைகளை படைத்த அணி மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் தொடரின் தவிர்க்க முடியாத வலுவான அணியாகவும் உள்ளது. ஜெயசூர்யா, சச்சின், ரோகித் சர்மா என பல ஜாம்பவான்கள் இந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஆனால், கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகு, ஒருமுறை கூட லீக் சுற்றில் தனது முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறவில்லை. 2013ம் ஆண்டிற்கு பிறகு 5 கோப்பைகளை கைப்பற்றி இருந்தாலும், 11 ஆண்டுகளில் ஒருமுறை கூட முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.
குஜராத்தை வீழ்த்துமா மும்பை?
இந்நிலையில் இன்று மும்பை அணி நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில், குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வென்று, கடந்த 11 ஆண்டுகளாக முதல் லீக் போட்டியில் வெல்ல முடியவில்லை, என்ற மோசமான சாதனையை மும்பை அணி தகர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
11 ஆண்டுகளாக தொடரும் மோசமான சாதனை:

2013ல் பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், அந்த சீசனில் தான் மும்பை அணி முதல்முறையாக கோப்பையை வென்றது
2014ல் அபுதாபியில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
2015ல் ஈடன் கார்டனில் நடைபெற்ற மும்பை அணியை கொல்கத்தா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2016ல் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை புனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2017ல் புனேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை புனே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2018ல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2019ல் வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. 
2020ல் அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது
2021ல் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது
2022ல் பிரபோர்னில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. 
2023ல் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது. 

மேலும் காண

Source link