SRH Vs RCB Records: ஐபிஎல் 2024 தொடரில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டியின் மூலம், உடைக்கப்பட்ட மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐதராபாத் – பெங்களூர் அணிகள் மோதல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டிகள் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகின்றன. பேட்ஸ்மேன்கள் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 200 ரன்கள் என்பது அநாயசமாக கடக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 287 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணி 262 ரன்களை மட்டும் சேர்த்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 500 ரன்களுக்கும் மேலாக குவிக்கப்பட்ட இந்த போட்டியின் மூலம், உலக டி-20 வரலாற்றில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
டி20 போட்டியில் அதிக பவுண்டரிகள்
ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து 43 பவுண்டரிகள் மற்றும் 38 சிக்ஸர்களை விளாச்ன. அதாவது மொத்தம் 81 பவுண்டரிகள் குவிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரு டி20 போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட பவுண்டரிகள் பட்டியலில் நேற்றைய போட்டி முதலிடம் பிடித்துள்ளது.
1. 81- ஐதராபாத் – கொல்கத்தா, பெங்களூரு மைதானம் [43 X 4-கள் + 38 X 6கள்]
2. மேற்கிந்திய தீவுகள் – தென்னாப்ரிக்கா, செஞ்சூரியன் மைதானம் [46 X 4கள் + 35 X 6கள்]
3. முல்தான் சுல்தான்கள் vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ராவல்பிண்டி 2023 [45 X 4கள் + 33 X 6கள்]
டி-20 போட்டியில் அதிக ரன்கள்:
ஐதராபாத் மற்றும் பெங்களூர் போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து 40 ஓவரில் மொத்தமாக 549 ரன்களை குவித்தன. ஒரு டி-20 போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
549 — ஐதராபாத் vs பெங்களூர், பெங்களூரு 2024
523 — ஐதராபாத் vs MI மும்பை 2024
517 — மேற்கிந்திய தீவுகள் vs தென்னாப்ரிக்கா, செஞ்சுரியன் 2023
515 — முல்தான் சுல்தான்கள் vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ், ராவல்பிண்டி 2023
506 — சர்ரே vs மிடில்செக்ஸ், தி ஓவல் 2023
ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்ள்
அதிரடியான பேட்டிங்கால் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்ஸ்கள் என்ற சாதனையையும் ஐதராபாத் தனதாக்கியுள்ளது. முன்னதாக ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட 21 சிக்சர்கள் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் மற்றும் கிளாசென் உடன் ஐதராபாத் முறியடித்துள்ளது.
1. 22 — ஐதராபாத் vs பெங்களூர், பெங்களூரு, 20242. 21 — பெங்களூர் vs புனே, பெங்களூரு, 20133. 20 — பெங்களூர் vs குஜராத் லயன்ஸ், பெங்களூரு. 20164. 20 — டெல்லி vs குஜராத் லயன்ஸ், டெல்லி, 20175. 20 — மும்பை vs ஐதராபாத், ஐதராபாத் , 2024
டி-20 போட்டியில் அதிக சிக்சர்கள்:
ஐதராபாத் மட்டுமின்றி பெங்களூரு அணியும் நேற்று பேட்டிங்கில் வாணவேடிக்கையை காட்டியது. அதன்படி, மொத்தம் 16 சிக்சர்களை விளாசியது. இதன் மூலம், நேற்றைய போட்டியில் மொத்தம் 38 சிக்சர்ஸ்கள் விளாசப்பட்டு, ஒரு டி-20 போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசப்பட்ட போட்டியாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் அண்மையில் நடந்த ஐதராபாத் – மும்பை போட்டி உள்ளது.
1. 38 — மும்பை vs ஐதராபாத், ஐதராபாத் , 20242. 38 — ஐதராபாத் vs பெங்களூர், பெங்களூரு, 20243. 37 — Balkh Legends vs காபூல் ஸ்வான், ஷார்ஜா 20184. 37 — ஜமைக்கா தல்லாவாஸ் vs செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் பாஸ்டெர்ரே 2019
டி-20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்:
ஐதராபாத் அணி குவித்த 287 ரன்கள் என்பது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் மட்டுமல்ல. உலக டி-20 வரலாற்றில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
1. 314/3 — நேபாளம் vs மங்கோலியா ஹாங்சூ 20232. 287/3 — ஐதராபாத் vs பெங்களூர், பெங்களூரு 20243. 278/3 — ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து டேராடூன் 20194. 278/4 — செக் பிரதிநிதி vs துருக்கி இஃப்லோவ் நாடு 20195. 277/3 — ஐதராபாத் vs மும்பை ஐதராபாத் 2024
பார்ட்னர்ஷிப்பில் சாதனை:
எந்த டி20 போட்டியிலும் ஐந்திற்கு மேல் 50+ பார்ட்னர்ஷிப்கள் இல்லாத நிலையில், நேற்றைய போட்டியில் ஏழு 50+ பார்ட்னர்ஷிப்கள் அமைந்தன. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஐந்துமுறை 250+ இலக்குகள் நிர்ணயிக்கப்ப மொத்தங்களில் மூன்று 2024 பதிப்பில் மட்டுமே வந்துள்ளன.
மேலும் காண