Electoral Bonds: தேர்தல் பத்திரத்தில் மெகா ஊழல்? பண மழையில் நனைந்த பாஜக.. தேர்தல் ஆணையம் ஷாக்!


<p><strong>Electoral Bonds:</strong> நாடு முழுவதும் தேர்தல் பத்திரம் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் வரை, தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.</p>
<p>அதன் தொடர்ச்சியாக இன்று புது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>இந்த காலக்கட்டத்தில், பாஜக 2,190 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு மொத்தமாக, 8,250 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.</p>

Source link