Cinema Headlines: அட்லீக்கு மத்திய அமைச்சர் பாராட்டு: இணையும் எஸ்.ஜே.சூர்யா, ஃபஹத்.. சினிமா செய்திகள் இன்று!

இளம் வயது விஜயகாந்தை நினைவுபடுத்திய மகன் சண்முக பாண்டியன்: படை தலைவன் பட வீடியோ!

சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இப்படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். விஜயகாந்த் மறைவுக்குப் பின் வெளியாகும் அவரது மகனின் இப்படத்துக்கு  பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இணையும் இரண்டு நடிப்பு அரக்கர்கள்.. ஃபகத் ஃபாசில் – எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படம்!

தமிழ் மற்றும் மலையாளம் சினிமாக்களின் தனித்துவமான நடிகர்களாகக் கொண்டாடப்படுபவர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஃபகத் ஃபாசில். நடிப்பு அரக்கர்கள் எனப் பெயர் பெற்ற இருவரும் தற்போது மலையாளப் படம் ஒன்றில் இணைந்து நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெய ஜெய ஜெய ஹெய ஹே’ எனும் மலையாள வெற்றிப் படத்தைக் கொடுத்த விபின் தாஸ் இப்படத்தை இயக்குகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் ஆணழகன்.. மீண்டும் சிவப்பு கம்பளம் விரிக்குமா கோலிவுட்? சாக்லேட் பாய் பிரசாந்துக்கு பிறந்தநாள்!

1990களில் தன் 17 வயதிலேயே வைகாசி பொறந்தாச்சு என்ற படம் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமாகி 2000களின் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பிரசாந்த். பிரபல தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான தியாகராஜனின் மகனான பிரசாந்துக்கு முதல் படமே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்தடுத்து கலவையான வெற்றிப்படங்களை கொடுத்து வந்த பிரசாந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படம் மூலம் மிகப்பெரும் அங்கீகாரம் மற்றும் வெற்றியைப் பதிவு செய்தார்.

கழுத்தை நெறித்த கடன்.. சாமானிய மக்கள் நிலையை எண்ணி நொந்துப்போன சமுத்திரகனி

2019ஆம் ஆண்டு வெளியான தன் அடுத்த சாட்டை படத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அதுபோன்ற படைப்புகளை  மீண்டும் எடுக்க மனம் வரவில்லை என நடிகர் சமுத்திரகனி தெரிவித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தம்பி ராமையா, யுவன், அதுல்யா ரவி, கௌசிக் சுந்தரம் ஆகியோருடன் சமுத்திரக்கனி இணைந்து நடித்த திரைப்படம் அடுத்த சாட்டை. கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை மையப்படுத்திய இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

பிரேஸில் நாட்டு மாடலுடன் ஷாருக்கான் மகனுக்கு காதலா?

பாலிவுட்டின் கிங் கான் எனக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கானுக்கு தற்போது 26 வயது ஆகிறது. இவர் கலிஃபோர்னியாவில் தன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு D’ yavol என்கிற தன் சொந்த பிராண்டைத் தொடங்கி ஆண்களுக்கான அழகு சாதனங்கள், விஸ்கி,வோட்கா என பல பொருட்களை விற்பனை செய்து வருகிறார். மேலும், தற்போது பாலிவுட் சினிமா துறையை பின்னணியாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். இவர் பிரேஸில் நாட்டு மாடல் மற்றும் நடிகையான லாரிசா போனேசியை காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link