Chhattisgarh Bus Accident: கோர விபத்து


Chhattisgarh Bus Accident: சத்திஸ்கரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் 12 பேர் பலி:
துர்க் மாவட்டத்தில் கும்ஹாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்ரி கிராமத்திற்கு அருகே இரவு 8:30 மணியளவில்,  ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 40 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 
20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 12 பேர் சிகிச்ச பலனின்றி உயிரிழந்தனர். 14 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
 
 
 

மேலும் காண

Source link