அரசியல் உலகில் வெள்ளை துண்டு கலாச்சாரம் என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே விஐபி கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது.

அலுவலகங்கள், கார்கள், பொதுவான இடங்களில் விஐபிக்க‍ள் அமரும் இருக்கைகளுக்கு மட்டும் வெள்ளை துண்டு அணிவிக்கப்பட்டு அதன்மேல்தான் அவர்கள் அமர்வார்கள். இது பிரிட்டிஸ் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.

அதன்படியே முதலமைச்சர் விஜய்யும் ஆரம்பத்தில் வெள்ளை துண்டு போடப்பட்ட சேரில்தான் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில், இதுபோன்ற வெள்ளை துண்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசி பிரியா முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், தன்னுடைய முதலமைச்சர் இருக்கையில் வெள்ளை துண்டை அகற்றியுள்ளார்.

இதனை வரவேற்றுள்ள ஆர்வலர் லிசிபிரியா, முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports