விழுப்புரம்‌ மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌ சி.பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மைய அலுவலகத்தில்‌ 01.01.2024 அன்று தொடங்கும்‌ காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்‌, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ தற்பொழுது பெறப்படுகின்றன.

பத்தாம்‌ வகுப்பு (தோல்வி), பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ அதற்கும்‌ மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள்‌ வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து பதிவினைத்‌ தொடர்ந்து புதுப்பித்து 31.12.2023 அன்றைய தேதியில்‌ ஐந்தாண்டுகள்‌ நிறைவடைந்த பின்னர்‌ வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்‌ இளைஞாகளுக்கும்‌, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து ஓர்‌ ஆண்டு நிறைவடைந்த பின்னர்‌ வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்‌ மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும்‌ தமிழக அரசால்‌ உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெற மனுதாரரின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.72,000/- க்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌, தாழ்த்தப்பட்ட மற்றும்‌ பழங்குடியின மனுதாரர்கள்‌ 31.12.2023 அன்றைய நிலையில்‌ 45 வயதிற்குள்ளும்‌, இதர இனத்தை சார்ந்தவார்கள் 40 வயதிற்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அரசாணை (நிலை) எண்‌.127, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத் ‌(ஆர்‌2) துறை நாள்‌ 25.07.2019 வாயிலாக இத்திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ உதவித்‌ தொகையினை இருமடங்காக உயாத்தி மாதமொன்றுக்கு பத்தாம்‌ வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம்‌ வகுப்பு தோரச்சிக்கு ரூ.300/- மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- பட்டப்படிப்பு தோச்சிக்கு ரூ.600/- மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம்‌ வகுப்பு தோல்வி மற்றும்‌ தோச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தோ்ச்சிக்கு ரூ.750/-ம்‌ மற்றும்‌ பட்டப்படிப்பு தோர்ச்சிக்கு ரூ.1000/- என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம்‌ பெற விரும்பும்‌ மனுதாரர்கள்‌ தங்களின்‌ வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மைய அலுவலகத்தில்‌ விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும்‌ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்‌ அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. மேலும்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ ஏற்கனவே பயன்பெற்றவர்கள்‌ மீள விண்ணப்பிக்கத்‌ தகுதியற்றவர்களாவார்கள்‌. மேலும்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறுபவர்களின்‌ பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

01.01.2024 உடன்‌ தொடங்கும்‌ காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள்‌ 2024 பிப்ரவரி 28 -ம்‌ தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ விழுப்புரத்தில்‌ இயங்கும்‌ வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை திட்டப்பிரிவில்‌ அனைத்து அசல்‌ கல்வி சான்றிதழ்கள்‌ வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும்‌ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்‌ கணக்குப்புத்தகத்துடன்‌ நேரில்‌ சமர்ப்பிக்கலாம்‌.

வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும்‌. வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை மாதந்தோறும்‌ வழங்குவதற்கு அரசால்‌ அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது எனவும்‌ விழுப்புரம்‌ மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌ சி.பழனி தெரிவித்துள்ளார்‌.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
пхукет аренда авто форум винского аренда авто пхукет раваи
масло редукторное масло редукторное спб
tombola gioco di craps
gioco di dadi online my website: dragon Tiger pragmatic
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

புதிய மின் இணைப்புக்கு இனி கள ஆய்வு இல்லையா? ஆகஸ்ட் 28 முதல் என்ன மாற்றம்?|No More Field Visits! New TN Power Connection Rule From Aug 28 | ACTPnews.com

“சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!”- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா | ACTPnews.com

சிறந்த முதல்வர் யார்? ஸ்டாலின் பெயரை சொன்ன அபிஜித் தீப்கே!|‘One of India’s Best’: Abhijit Deepke Praises MK Stalin | ACTPnews.com

ஈரானுடன் வர்த்தகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை ஏன்?|Iran Trade Shock: 4 Indian Firms Caught in US Sanctions Net | ACTPnews.com

ட்ரம்ப் வரிக்கு பதிலடி: அமெரிக்கப் பொருள்களுக்கு 50% வரை கனடா வரி|Canada Fires Back: $27.6B US Goods Face New Tariffs | ACTPnews.com

пф яндекс купить поведенческие факторы сервис