புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடிதான்!' - சாடும் திமுக


கடந்த பட்ஜெட்டில் வில்லியனூரில் வேளாண்மை மண்டலம் மற்றும் சித்த மருத்துக்கல்லூரி அமைக்கப்படும் என்றும், புதுச்சேரியில் மருந்து பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்பட்டது. அதுபற்றி இந்த பட்ஜெட்டில் ஏதும் சொல்லப்படவில்லை. அதேபோல் மடுகரையில் கொண்டு வருவதாக கூறிய மாதிரிக் கல்லூரி என்ன ஆனது?

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் திறக்கப்படும் என்றீர்களே அது என்ன ஆனது? கிடப்பில் உள்ள இரயில்வே திட்டங்கள் பற்றி ஏதும் இல்லை. காரைக்கால் துறைமுகத்தை அரசே திரும்பப் பெறுவது சம்பந்தமான அறிவிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரி துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்துப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. அரசுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி அளவிற்கான மின் கட்டண பாக்கி, வரி வசூல் பாக்கி, கலால் துறை பாக்கிகளை முறையாக வசூல் செய்வதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை.

புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதை பெருமையாக சுட்டிக்காட்டியிருக்கும் முதல்வர் ரங்கசாமி, தேர்தல் அறிக்கையில் கூறிய மாநில அந்தஸ்து, நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல், அரசுப் பேருந்துகளிலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசப் பயணத்திட்டம் என தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் பெயரளவிற்கு கூட சொல்லப்படவில்லையே ஏன்?

இருப்பதை வைத்து அரசை நடத்தலாம் என்பது சரி வராது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் பா.ஜ.க–என்.ஆர்.காங்கிரசின் அதிகார போட்டிதான் நடந்ததே தவிர, இவர்களின் இரட்டை என்ஜின் ஆட்சி எந்தவித சிறப்புத் திட்டங்களையும் புதுச்சேரிக்கு கொண்டுவரவில்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்த பட்ஜெட் புதுச்சேரி மக்களை ஏமாற்றும் வழக்கமான கணக்கு வழக்கே தவிர, மாநிலத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய பட்ஜெட் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed