Ramayana Movie


நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது.

Ramayana Movie

இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 4,000 கோடி எனத் தெரிவித்திருந்தார்.

“இந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய வசூலைச் செய்து லாபம் ஈட்டும்?” என்ற கேள்விக்குச் சமீபத்திய பேட்டியில் நடிகர் யாஷ் விளக்கமளித்திருக்கிறார்.

அவர், “ரூ. 4,000 கோடி என்பது ‘ராமாயணம் பாகம் 1’ படத்திற்கான பட்ஜெட் மட்டும் கிடையாது. இது பலருக்கும் இருக்கும் ஒரு தவறான புரிதல். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து.

இந்த ரூ. 4,000 கோடி என்பது இரண்டு பாகங்களுக்குமான தயாரிப்புச் செலவு மற்றும் விளம்பரத்திற்கான செலவுகளை உள்ளடக்கியது. ஹாலிவுட்டில் ஒரு படத்தின் தயாரிப்புச் செலவிற்கு நிகராகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ உலகளவில் விளம்பரம் செய்யச் செலவழிப்பார்கள்.

நடிகர் யஷ்
நடிகர் யஷ்

ஏனென்றால், அது உலக சந்தையைக் குறிவைக்கிறது. அதேபோலத்தான் இதிலும் செலவிடப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கப்போகும் வருவாயும் உலகளாவிய அளவில்தான் இருக்கும்.

நாம் முயற்சி செய்யாவிட்டால் வேறு யாராவது இதைச் செய்துவிடுவார்கள். ‘ராமாயணம்’ மற்றும் எனது அடுத்த படமான ‘டாக்ஸிக்’ என இரண்டு படங்களுமே இந்திய சினிமாவை சர்வதேச தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் தான்,” என்று பகிர்ந்துகொண்டார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Женский журнал https://wlife.com.ua о красоте, здоровье, моде, отношениях, семье и повседневной жизни. Полезные советы, интересные статьи, тренды, рецепты, идеи для…

  2. Женский журнал https://wlife.com.ua о красоте, здоровье, моде, отношениях, семье и повседневной жизни. Полезные советы, интересные статьи, тренды, рецепты, идеи для…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed