மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து,தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் , இருக்கைகளை முன்பதிவு செய்யும் வகையில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறைதீர்ப்பு எண்களும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் சந்தேகம் எழுந்தால், ஆகிய எண்களை அழைத்து தெளிவு பெறலாம் என போக்குவர்த்துறை தெரிவித்துள்ளது.
2024 – பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி, தெரிவித்துள்ளார்.
2024-பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7.154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10.214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2024 – பாராளுமன்ற தேர்தல், எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது. போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி, இ.ஆய், அவர்களின் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை இணை ஆணையர். காவல்துறை உயர் அலுவலர்கள். அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் காண