தேர்தல் முடிந்தால் விட்டுடுவோமா, கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து மக்களின் தாகத்தை தனித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி. சாலை ஓர கடை போல் அமைத்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர்.முன்னாள் அமைச்சர் வளர்மதி திறந்து வைத்த தண்ணீர் பந்தல் 5 நிமிடத்தில் காலி செய்த பொதுமக்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் பாரம்பரியம்

தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றாக தண்ணீர் பந்தல் திறக்கும் நடைமுறை பண்டைய காலத்தில் இருந்து வருகிறது. பண்டைய காலத்தில் பொதுமக்கள், ஊரில் இருந்த முக்கிய நபர்கள் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை திறப்பது வழக்கம். அதன் ஒரு பகுதியாக கோடை காலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தலை திறப்பது என்பது பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசியலில் முக்கிய கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில், தண்ணீர் பந்தங்களை திறக்க எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தண்ணீர் பந்தலை திறந்து வருகின்றனர்.

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் திறக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் கோடை வெயிலில் தாகத்தை தீர்க்க தர்பூசணி பழம், வெள்ளரிப்பழம், பனை நுங்கு, கரும்பு ஜூஸ், கீரக்காய், கூழ், மோர், பழச்சாறு போன்றவை சாலை ஓர கடை போல் அமைத்து பந்தலில் இளநீர், நுங்கு, ஈச்சம்பழம், வாழைப்பழம் தொங்கவிட அலங்கரிக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

" பழக்க தோஷத்துல பண்றாங்கப்பா "

தண்ணீர் பந்தலை திறந்து உடனே பொதுமக்கள் முந்தி அடித்துக்கொண்டு தண்ணீர் பந்தலுக்கு அமைக்கப்பட்டிருந்த கீரணிப்பழம், தர்பூசணி பழம், குளிர்பானம், கீரைக்காய் போன்றவை பொதுமக்கள் பையில் அள்ளிக் கொண்டும், மூட்டை கட்டி பொதுமக்கள் ஐந்தே நிமிடத்தில் தண்ணீர் பந்தலில் காலி செய்தனர். தேர்தல் சமயத்தில் கட்சியினர் காய்கறி விற்பது, இளநீர் விற்பது, தோசை சுட்டுக் கொடுப்பது, ஆம்லெட் போட்டுக் கொடுப்பது, பூ கட்டி கொடுப்பது, என பல்வேறு வகையில் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். தற்போது முன்னாள் அமைச்சர் அதே பாணியில் மக்களுக்கு ஜூஸ் போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்துள்ளார்.

வாக்கு சேகரித்த பழக்க தோஷத்தில் அமைச்சர் செய்தாராம் என சில பொதுமக்கள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றனர். அதேபோன்று பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த குளிர்ச்சியான பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் விழாவும் மேகலகமாக நடத்திவிட்டு அங்கிருந்து அதிமுகவினர் கலந்து சென்றனர். பொதுமக்களும் அதிமுக கட்சித் தொண்டர்களும் தங்களுக்கு தேவையான பழங்கள் ஆகியவற்றை மூட்டை கட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பொதுமக்கள் மற்றும் அதிமுக கட்சித் தொண்டர்கள் போட்டி போட்டு கொண்டு அங்கிருந்து பொருட்களை அள்ளிக் கொண்டு சென்றது அங்கு இருந்தவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.