கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாம வழிகள் கூறிய ஆலயத்தின் சிவாச்சாரியார் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு மகா தீபாராதனை காட்டினார். அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.

தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம்.

சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் இன்று தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சித்திரை மாதம் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு உற்சவர் கணபதிக்கும் எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்ப அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலை அணிவித்த பிறகு சாமிக்கு துப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்து சர்மா சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்.