நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் நாளுக்கு நாள் புதிய புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றது. கடந்த 22ஆம் தேதிதான் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. மே 19ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 29ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இரு அணிகளும் ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றது. இதுவரை இரு அணிகளும் 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் கொல்கத்தா அணியின் ஆதிக்கமே இதுவரை இருந்துள்ளது. கொல்கத்தா அணி மொத்தம் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சொந்த மைதானத்தில் களமிறங்கும் பெங்களூரு அணிக்கு புள்ளி விபரங்கள் சாதகமாக இல்லை. இதுவரை இரு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடி, அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் கடைசியாக நடைபெற்ற ஐந்து போட்டிகளைக் கணக்கில் கொண்டால் கூட அதிலும் பெங்களூரு அணி பின் தங்கியே உள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக பெங்களூரு அணி கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளிலும் தங்களது முந்தைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி ஒரு லீக் போட்டியில் விளையாடி அதிலும் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணியை 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கிய பெருமை கொல்கத்தா அணியின் வசமே உள்ளது.
பெங்களூரு அணியின் முகம் என்றால் அது விராட் கோலிதான். அதேபோல் கொல்கத்தா அணியின் முகங்களில் ஒன்றாக இருப்பவர் அந்த அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஆலோசகராகவும் உள்ள கௌதம் கம்பீர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் இணைந்து விளையாடி இருந்தாலும், இருவருக்கும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டனர். இதனால் இந்த பிரச்னை இவர்கள் இருவருக்கும் இடையில் மட்டும் நடக்காமல், விராட் கோலியின் ரசிகர்களுக்கும் கம்பீருக்கும் இடையில் ஏற்பட்டது. ஆனால் இந்த பிரச்னைக்கு முன்னர் இருந்தே ஐபிஎல் தொடரில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
மேலும் காண