ட்ரம்ப்


அமெரிக்காவின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், அதன் இருப்பிடத்தின் காரணத்திற்காகவும் எப்போதுமே அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு கிரீன்லாந்து மீது கண் உண்டு.

கிரீன்லாந்தை வாங்கவெல்லாம் பிளான் செய்தார் ட்ரம்ப். ஆனால், அது வேலைக்கு ஆகவில்லை.ஆனால், தற்போது டென்மார்க்குடன் ஒப்பந்தம் போட்டு, கிரீன்லாந்தின் ‘நிரந்தர கட்டுப்பாட்டை’ பெற்றிருக்கிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப் மகிழ்ச்சி

இது குறித்து ட்ரம்பே தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.ட்ரம்ப் தனது பதிவில், “அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ட்ரம்ப்

ஒரு பைசா கூடச் செலவில்லை!

இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகளுக்கும் அமெரிக்காவிற்குக் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இது அமெரிக்காவின் பல கவலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.

இதில் அமெரிக்காவிற்குச் ஒரு பைசா கூடச் செலவில்லை.

எனது வழிகாட்டுதலின்படி, கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையானவற்றைச் செய்யும் முழுமையான அதிகாரத்தை அமெரிக்கா நிரந்தரமாகப் பெற்றுள்ளது.

இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றிச் சாதித்துள்ளோம்.

முடிவில்லா ஒப்பந்தம்

இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றிச் சாதித்துள்ளோம்.

கூடுதலாக, இனிமேல் அமெரிக்காவின் எதிரி நாடுகள் எதுவும் கிரீன்லாந்தில் தளம் அமைக்கவோ, இராணுவ இருப்பைக் கொண்டிருக்கவோ அல்லது உணர்திறன் மிக்க முதலீடுகளைச் செய்யவோ முடியாது. இதற்கு அமெரிக்காவின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கட்டாயம்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அதிபர்கள் கிரீன்லாந்தின் முக்கியத்துவத்தை அறிந்தே இருந்தனர்.

ஆனால் அவர்களால் எதையும் செய்ய முடியாமல் போனது. மிக முக்கியமான இந்தச் சூழலை நிரந்தரமாகவும் தீர்க்கமாகவும் கையாண்ட அதிபர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

இது ஒரு ‘முடிவில்லா ஒப்பந்தம்’.

ராணுவத் தளத்தை விரைவில் அமைப்போம்

கிரீன்லாந்தில் ஏதுவான பல பகுதிகள் உள்ளன. அவற்றில் பொருத்தமான ஒரு பகுதியில் மிகப்பெரிய ராணுவத் தளத்தை அமைக்கும் பணியை நாங்கள் உடனடியாகத் தொடங்குவோம்.

அதன் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகளில் கிரீன்லாந்து மக்களுடன் இணைந்து செயல்படுவோம்.

இந்தத் தீர்வு அமெரிக்கா, டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் நமது கூட்டாளி நாடுகள் அனைத்திற்கும் ஒரு மிகச்சிறந்த முடிவாகும்.

இந்த மிகப்பெரிய, மிக முக்கியமான மூலோபாய நிலப்பரப்பின் மூலம், ஒரு மகத்தான எதிர்காலத்தை நோக்கி டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் அருமையான மக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நாங்கள் இதை மிகக் கவனமாகப் பாதுகாப்போம்! இது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு நனவான தருணம்—மிகவும் முக்கியமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் தனித்துவமானது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

எப்படியோ ட்ரம்ப் போட்டுவைத்த திட்டம் சக்சஸ்!



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Легко дома музыка онлайн радио дача прямо сейчас. На радиостанции транслируются песни разных лет. Запускайте эфир в любое удобное время.…

  2. Быстро в интернете радио дача в хорошем качестве. На радиостанции можно услышать лучшие песни. Включайте трансляцию в любое удобное время.…

  3. Удобно дома радио дача без рекламы онлайн бесплатно. В онлайн-трансляции собраны современные композиции. Включайте трансляцию на работе. Следите за программами…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports