தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சடங்கு நிகழ்ச்சியில் ஷாருவுக்கு அவளது தாய் மாமா மூர்த்தி பெரிய சீர்வரிசையுடன் சடங்கு செய்ய இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வருத்தப்படும் ஜானகி
அதாவது, அடுத்து தனத்திற்கு சடங்கு செய்ய ஏற்பாடு செய்ய மாமனாக மணிவண்ணன் சீர் வரிசைகளை வைத்து சடங்கை செய்து முடிக்க, பிறகு மாயாவுக்கு சடங்கு செய்ய வேண்டும் என சொல்ல பத்மா அவளுக்கு சீர் செய்ய யார் இருக்கா? முடிக்க வேண்டியது தான் என்று சொல்ல ஜானகி வருத்தப்பட மாயாவும் பீல் பண்ணுகிறாள்.
இந்த நேரம் பார்த்து மணிவண்ணன் தனத்துக்கு நான் தாய் மாமா என்றால், மாயாவுக்கும் நான் தாய் மாமன் தான், அவளுக்கும் நான் தான் சீர் செய்வேன் என சடங்குகளை செய்ய மாயா, ஜானகி மகிழ்ச்சி அடைகின்றனர்.
மகிழ்ச்சியில் சீனு
பிறகு முறை மாமனாக சீனு மூணு பேருக்கும் மோதிரம் போட ஷாரு காதலோடு அதை ஏற்க தனம் மகிழ்ச்சியோடு கையை காட்ட மாயா விருப்பமின்றி போட்டு கொள்கிறாள். ஆனால் சீனு மாமா மோதிரம் போட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். இதே போல் நம்ம கல்யாணமும் நடக்கும் என மனதில் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறான்.
மாயா நடந்து முடிந்த சடங்கை நினைத்து ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாள். பிறகு மணிகண்டனை மொட்டை மாடியில் பார்த்து இதுவரைக்கும் நான் உங்ககிட்ட அதிகம் பேசினது கூட கிடையாது, ஆனால் சபையில் என்னை விட்டு கொடுக்காமல் சீர் செய்தீங்க. எனக்கு இந்த வீட்ல தனம், ஜானகி பெரியம்மாவை தவிர்த்து யாருமே இல்லாமல் தனியாக இருப்பது போல் பீல் பண்ணேன், ஆனால் இப்போ எனக்காக எல்லாரும் இருக்கீங்க என்று சந்தோஷமாக பேச அதை யதேச்சையாக பார்க்கும் ஜானகி ரொம்ப சந்தோஷப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Siragadikka Aasai : போலீசிடம் மாட்டிய முத்து.. பயந்துபோன மீனா-சிறகடிக்க ஆசையில் இன்று !
Ajithkumar: தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி
மேலும் காண