திமுக-வினர் அவதூறாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மறைமுகமாக மற்றும் பலர் (அதிமுக) ஆதரவு கொடுத்துகொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா அவர்களைத் தவறாகப் பேசியவர்கள் உடன் கூட்டணி பேசும்போதே அவர்களின் திட்டம் என்னவென்று தெரிந்துவிட்டது. அவர்கள் முகமூடி கிழிந்துவிட்டது என்று தெரியாமலேயே கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் உங்கள் சகோதரி, என் தங்கைக்கு, மரகதம் குமரவேல் அவர்களுக்கு தயவு செய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இந்த மற்றும் பலர் பாஜகவின் ஒரு கிளை. ஆனால் இப்போது திமுகவின் ஒரு கிளை கழகமாக மாறிவிட்டார்கள். மக்கள் காசை தொட விடமாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம்.

சட்டமன்றத்தில் ஊழல் என்று சொன்னால்போதும்… உடனே ஆதாரத்தைக் காட்டு என்று சொல்வார்கள். ஆதாரத்தை எடுத்துக் காட்டினால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்வார்கள். பேசு, பேசு என்று சொல்வார்கள். அப்படி நான் பேசினால் பேச விடமாட்டார்கள். 30, 35 வருடமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதனால் எனக்கு புதிதாக தோன்றவில்லை.

ஊழல் செய்த திமுக-வை விடமாட்டோம். இதுவரைக்கும் ஊழலே செய்யவில்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? “என்னப்பா நீ ஸ்டாலின் சார் பற்றியே கேள்வி கேட்கிற அவரே பாவம்… இப்போது எதிர்க்கட்சித் தலைவராகக்கூட இல்லை’ என்று சில விமர்சனங்கள் எல்லாம் வருகின்றன. தோற்றாலும், ஜெயித்தாலும் ஸ்டாலின் என்னுடைய அங்கிள். அவர் என்னுடைய ஸ்வீட் அங்கிள். இரண்டே பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று தூய சக்தி தவெக, மற்றொன்று தீய சக்தி திமுக.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed