சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் ஒன்றாக சேர்ந்து ரீல் ஜோடிகளாக நடித்த பலரும் ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர். அதில் ஒரு சில ஜோடிகள் மிகவும் அழகான ஒரு அன்பான வாழ்க்கையை தொடர்கிறார்கள். அதில் ஒரு ஜோடி தான் ஆலியா மானசா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் இடையில் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு ஆலியா மானசா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சஞ்சீவ் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ராஜா ராணி 2 :

ராஜா ராணி சீரியல் இருவருக்குமே சின்னத்திரையில் நல்ல ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலின் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்தார். தன்னுடைய இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகினார். குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடியதால் அதை குறைப்பதற்காக கடுமையாக ஒர்க் அவுட் எல்லாம் மேற்கொண்டு மீண்டும் பழைய தோற்றத்திற்கு ஸ்லிம்மாக மாறினார்.

ஆலியா – சஞ்ஜீவ் விவாகரத்து :

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதே போல சன் டிவி யில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ தொடரின் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வருகிறார். இருவருமே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள். அவ்வப்போது அவர்களின் குழந்தைகளின் ரீல்ஸ், போட்டோஸ், வீடியோஸ் என எதையாவது போஸ்ட் செய்து கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் கூட அவர்கள் குடும்பத்துடன் வெகேஷனுக்காக வெளிநாடு சென்ற புகைப்படங்களை கூட போஸ்ட் செய்து லைக்ஸ்களை அள்ளினார்கள். அந்த வகையில் ஆலியா மானசா மற்றும் சஞ்ஜீவ் இருவரும் சேர்ந்து இருப்பது போல சமீபத்தில் எந்த ஒரு போட்டோவும் போஸ்ட் செய்யாததால் அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற போகிறார்கள் என்பது போல வதந்திகள் சோசியல் மீடியா எங்கும் பரவி வருகின்றன.

View this post on Instagram

A post shared by alya_manasa (@alya_manasa)

ஆலியாவின் போஸ்ட் :

வதந்திகள் வெறும் வதந்திகள் மட்டுமே. இது போன்ற வந்ததிகளை கேட்டால் சிரிப்பு சிரிப்பாக தான் வரும் என கூறும் ஆலியா மானசா இந்த முறை இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் சண்டை போடுவது போல வீடியோ ஒன்றை பகிர்ந்து "டைவர்ஸா?? எங்களுக்கா?? NEVER" என குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். கொஞ்ச நாளா எங்களுக்குள்ள இப்படி தான் பிரச்சினை நடக்கிறது என பேசிக்கொள்கிறார்கள். ஆலியாவின் இந்த போஸ்ட் பார்த்த பிறகு தான் ரசிகர்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.