vijay tv siragadikka aasai april 1st episode update | Siragadikka Aasai மீனாவுக்கு திருடி பட்டம் கட்டிய ஸ்ருதியின் அப்பா…அடுத்து நடக்க போவது என்ன?


சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
”கொஞ்சம் கொஞ்சமா மனோஜ் என் பேச்ச மட்டும் கேட்குற மாதிரி மாத்தணும். அதான் இதுக்கு ஒரே solution” என ரோகிணி சொல்கிறார். அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே என வித்யா சொல்கிறார்.  ”இனிமே தாண்டி பெரிய பிரச்சனையே இருக்கு, உங்க அப்பாவ வர சொல்லு இல்லனா வீட்டை விட்டு வெளியே போ என சொல்லிடுவாங்க” என்கிறார் ரோகிணி. ”இப்போ உன் மாமியார் அந்த ஸ்ருதி கிட்ட தான் சிரிச்சி சிரிச்சி பேசுறாங்க. அந்த பொண்ணோட கிரேடு ஏறிக்கிட்டே இருக்கு. உன் கிரேடு இறங்கிகிட்டே போகுது” என வித்யா சொல்கிறார். 
ஸ்ருதியின் அம்மா தான் ஏற்பாடு செய்த ஆட்களை பயங்கரமாக திட்டுகிறார். அண்ணாமலை மற்றும் முத்துவை பந்திக்கு கூட்டிச் சென்று அசிங்கப்படுத்த திட்டம் வைத்துள்ளதாக அவர்கள் சொல்கின்றனர். ”இது போதும் பிரச்சனையை எப்படி பெரிதாக்கனும்னு எனக்கு தெரியும்” என ஸ்ருதியின் அம்மா சொல்கிறார். ஸ்ருதியின் அம்மா ஏற்பாடு செய்த ஆட்கள் அண்ணாமலை மற்றும் முத்துவை அழைத்துச் செல்கின்றனர். 
ஆனால் அதற்குள் அண்ணாமலை பந்தியில் இருந்து எழுந்து தான் உட்கார்ந்திருந்த இடத்தில் குழந்தைகளை உட்கார வைத்து சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருக்கிறார். இதை பார்த்து ஸ்ருதியின் அம்மா, அப்பா அப்செட் ஆகின்றனர். ரோகிணிக்கும், ஸ்ருதிக்கும் சுத்திப் போடுகின்றனர். அப்போது நமக்கு சுத்தி போட மாட்டாங்களா என ரவியும், மனோஜும் கேட்கின்றனர். 
ஸ்ருதியின் மாலையில், தங்க செயின் மாட்டிக் கொண்டு இருக்கின்றது. இதை மீனா எடுத்துக் கொண்டு இருக்கின்றார். அப்போது ஸ்ருதியின் அப்பா உள்ளே வந்து விடுகிறார். பின் ஸ்ருதியின் அம்மாவை கூப்பிட்டு, மீனா ஸ்ருதியின் செயினை திருடியதாக சொல்கிறார். பின் இருவரும் சேர்ந்து மீனாவை திட்டுகின்றனர். 
பின்னர் அங்கு விஜயா ஓடிச் சென்று என்ன ஆச்சி என கேட்கிறார். விஜயாவிடம் மீனா செயினை திருடியதாக சொல்கின்றனர். பின் மீனா அழுதுக் கொண்டே ஓடிச் சென்று முத்துவை கட்டிப்பிடித்து அழுகிறார். ஸ்ருதியின் அப்பா அண்ணாமலையிடம் மீனா குறித்து கம்ப்ளைண்ட் செய்கிறார். அண்ணாமலை  ”என் மருமக அப்படிப்பட்ட ஆள் இல்லை” என சொல்கிறார். ஆனால் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் மீனாவை பயங்கரமாக திட்டுகின்றனர். 
முத்து ”மீனா அப்படி செய்யுறவ இல்லை நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிங்க” என்கிறார். ”நான் எல்லாம் சரியாதான் புரிஞ்சிக்கிட்டு இருக்கேன். உங்கள மாதிரி ஆளை பத்தி எனக்கு நல்லா தெரியும்” என ஸ்ருதியின் அப்பா சொல்கிறார். அப்போது ”என்ன தெரியும்” என அண்ணாமலை கோபமாக கத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் காண

Source link