TVK Party: மக்களை நோக்கி நகருங்கள்: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய நிர்வாகிகள்..!

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு 2026ம் ஆண்டு முதல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண போகிறார் என்றும் அவரின் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள அவர்களின் கட்சி அலுவுலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவிக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை

இதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்வதற்கு தனி செயலியை விஜய் அறிமுகப்படுத்தினார்.   அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தனித்தனியாக பொறுப்பு கொடுக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்த நடிகர் விஜய் பல்வேறு திட்டங்களை நிர்வாகிகளுக்கு கூறியிருந்தார்.  அதேபோன்று இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு

இந்த மக்களவைத் தேர்தலில் விஜய் போட்டியிட போவதுமில்லை யாருக்கும்  ஆதரவும் இல்லை என தெரிவித்து இருந்தார்.  அதன் ஒரு பகுதியாக,  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு    தமிழக வெற்றிக் கழகத்தின்  உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட சில பணிகளை  செய்யாமல் மௌனம் காத்து வந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த நிலையில் தற்பொழுது , கட்சி நிர்வாகிகள் பல்வேறு நல திட்ட பணிகளில்  கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில்,  இலவச சட்ட ஆலோசனை மையத்தை  கொண்டு வர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொகுதி தோறும்,  ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில்,  பயிலகம் மற்றும் நூலகத்தை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோடை காலத்தை முன்னிட்டு

கோடை காலத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும்  பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் இலவச நீர் மற்றும் மோர் பந்தல் அமைப்பது வழக்கம்.  இது பல்வேறு முக்கிய கட்சிகளின் முக்கிய  பணியாக கருதப்படுகிறது. அதேபோன்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தற்போது நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்து துவங்கியுள்ளனர். அந்த வகையில்  வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் கோடைக்கால வெப்பநிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் குளிர்ச்சியான பழங்கள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் தெள்ளார் ஒன்றிய தலைவர் பரமசிவன், வந்தவாசி நகர தலைவர்  அருண் விஜய், நகர செயலாளர் ராஜேஷ்  நகர பொருளாளர் கோகுல் ஆனந்த், நகரத் துணைத் தலைவர் கெவின் நகர துணை செயலாளர் நைனா நகர பொறுப்பாளர் சோமசுந்தரம் ஒன்றிய பொறுப்பாளர் வினோத் ஒன்றிய தலைவர் ஷபி, ஒன்றிய  பொருளாளர் திரு மாஸ், ஒன்றிய துணை பொறுப்பாளர் சகாதேவன், நகர நிர்வாகி சந்தோஷ்  செந்தில், சுறா கோகுல், பிள்ளையார், பாரத், தெள்ளார் ஒன்றிய நிர்வாகிகள் யோகேஷ் அஸ்வின் மாதேஸ் பரமேஸ் போன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அளவிற்கு இது போன்ற திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்கிறது என்று.

Source link