பாஜக ஷாக், நிர்மலா சீதாராமனின் கணவர் போட்ட குண்டு..! ”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்”
தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள் முறயை சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதை விட இன்னும் அதிக வேகம் பெறும். மேலும் படிக்க..
”காசு இல்லப்பா..!” – தேர்தலில் போட்டியிடாதது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தமுறை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், பணம் இல்லாத காரணத்தால் தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மேலும் படிக்க..
காலையிலேயே சோகம்..! மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி காலமானார்
மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்து உண்டதாக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..
“பாஜக அலுவலகமாக மாறிவிட்ட தேர்தல் ஆணையம்” விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சனம்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 22 நாள்களே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தங்களுக்கான சின்னத்தை பெறுவதில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், பானை சின்னத்தை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி முயற்சி மேற்கொண்டது. கடந்த இரண்டு தேர்தல்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது. மேலும் படிக்க..
பரப்புரை முடிந்த பிறகு சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்பவர்களுக்கு தண்டனையா? தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!
ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் இதற்காக பல புதிய முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும் படிக்க..
மேலும் காண