TN Weather Update: தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக குறையும்.. டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

டெதென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை, தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மறுநாள், தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதி, தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 15 ஆம் தேதி,  தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:

10.04.2024 முதல் 14.04.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில்  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில  இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை  2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

இன்றும் நாளையும், அதிகபட்ச  வெப்பநிலை தமிழகத்தில்  ஒருசில  இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°–40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்   33°–37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

10.04.2024 மற்றும் 11.04.2024:

அடுத்த இரண்டு தினங்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை :

அதிக பட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ் மற்றும்  ஈரோட்டில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி  பகுதிகளில் 37° – 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் 33° – 37° செல்சியஸ்,   புதுவையில் 34.5° செல்சியஸ்,    காரைக்கால் பகுதியில் 33.6° செல்சியஸ்   மற்றும் மலைப்பகுதிகளில் 22° – 30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  சென்னை மீனம்பாக்கத்தில் 35.1° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.5° செல்சியஸ்   பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link