TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?

வெப்ப அலை வீசக்கூடும்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.04.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் உள் மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24.04.2024 அன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள். இதேபோன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு உள் மாவட்டங்களுக்கு,  நாளை வெப்ப அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து  தோலை பாதுகாக்க சில டிப்ஸ்   உங்களுக்காக இதோ ?

1. தயிருடன்  கடலை மாவை சேர்த்து  சருமத்தில் தடவலாம்

2.   பச்சை காய்கறி கீரை மற்றும்  பகை பழ வகைகளை உணவில் அதிகம் சேர்க்கவும்

3.  இளநீர் ,மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது அவசியம்

4.   கடுமையான கோடை வெயிலில் வெளியே செல்லும் பொழுது  சன்க்ரீம் ,லோஷன் ஆகியவற்றை விருப்பப்படுபவர்கள் தடவிக் கொள்ளலாம்.

5. தலைக்கு குடை தொப்பி உள்ளிட்ட பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்

6. வெயிலில் இருந்து வீட்டிற்கு திரும்பிய உடனே  ஆசுவாசப்படுத்திக்கொண்டு முகத்தை கழுவிக் கொள்வது நல்லது

7.  கோடை காலங்களில் சோப்பை பயன்படுத்துவதற்கு பதில்   ஃபேஸ்வாஷ் ஆகியவற்றை பயன்படுத்தலாம்

8. முடிந்தவரை வெளியில் துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்

வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள முக்கிய விஷயங்கள்..

1 முடிந்த அளவு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் பயணம்  செய்வதை தவிர்க்க வேண்டும்.

2  தாகம் எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்பொழுது தண்ணீர் குடிப்பது அவசியம்,  தாகம்  எடுக்கவில்லை என்றாலும் வேர்வை வழியாக வெளியேறும் நீரை மீட்டெடுக்க இது உதவும்

3  முடிந்தவரை பருத்தி ஆடைகளை பயன்படுத்த முயற்சி செய்யவும்.  இல்லாதவர்கள் இறுக்கமான ஆடைகள்,  எடை அதிகம் உள்ள ஆடைகள் ஆகியவற்றை தவிர்க்கலாம்.

4  வெயிலில் கடினமான பணிகளை செய்வது  முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள்

5.  மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டால்  தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்

6.  வீட்டையும் முடிந்த அளவு குளிர்ச்சியாக வைத்திருக்க  முயற்சி செய்யுங்கள்.

7.   முடிந்த அளவு இயற்கை   குளிர்பானங்களை குடிப்பதை தவிர்த்து விட்டு,  இயற்கையாக கிடைக்கக்கூடிய  பழங்கள் மற்றும் பழச்சாறுகளை சாப்பிடுவது நல்லது.

8 புரதச்சத்து அதிகம் உள்ள  உணவுகளை தவிர்ப்பது நல்லது.

9.  அதிகரிக்கும் வெப்பம்   பல்வேறு வகைகளில் ஆபத்தை ஏற்படுத்தும்,  எனவே முதியவர்களை முடிந்த அளவிற்கு வெயிலில்  வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.  அதேபோன்று  குழந்தைகளையும் மாலை வேலைகளை தவிர  மதிய வேலைகளில் வெளியே அனுப்பாமல் இருப்பது  நல்லது.

10 .   அதேபோன்று தொடர்ந்து அரசு கூறும்  நெறிமுறைகளை பின்பற்றுவது,  தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில்  வெயில் பாதிப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது  மிக அவசியமாக உள்ளது.

Source link