Tiruvannamalai to Chennai Beach Station Train Ticket Fare Just 50 Rupees Public Happy TNN | திருவண்ணாமலை – சென்னை கடற்கரைக்கு ரயிலில் கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே


திருவண்ணாமலையிலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயிலில் சென்னைக்கு 50 ரூபாயும், வேலூர் கண்ட்ரோல்மென்ட்க்கு 25 ரூபாயும் போளூருக்கு 10 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு ரயில் இயக்கம்  
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு திருக்கோவிலூர் விழுப்புரம் மார்க்கமாக கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் சேவை இருந்துள்ளது. தற்போது விழுப்புரம் காட்பாடி ரயில்வே மார்க்கம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் சென்னை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாட்களில் மட்டும் சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்ட்ரோல்மென்ட் வரை இயங்கி வந்த மின்சார ரயில் வரும் இரண்டாம் தேதி முதல் தினமும் திருவண்ணாமலை வரை இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரைக்கு செல்ல ரயில் கட்டணம்
திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் இருந்து போளூருக்கு பத்து ரூபாயும், ஆரணி சாலைக்கு 15 ரூபாயும், கண்ணமங்கலத்திற்கு 20 ரூபாயும், வேலூர்  கண்ட்ரோல்மென்ட்க்கு 25 ரூபாயும், காட்பாடிக்கு 25 ரூபாயும், சோளிங்கருக்கு முப்பது ரூபாயும், அரக்கோணத்திற்கு 35 ரூபாயும், திருவலங்காட்டிற்கு 40 ரூபாயும், திருவள்ளூருக்கு 40 ரூபாயும், வில்லிவாக்கத்திற்கு 45 ரூபாயும், பெரம்பூர் , வண்ணார்பேட்டை , ராயபுரம் , சென்னை கடற்கரை வரையில் 50 ரூபாயும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையிலிருந்து மே மூன்றாம் தேதி முதல் தினமும் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்ட்ரோல்மென்ட் காட்பாடி வழியாக சென்னை கடற்கரைக்கு 9.50 மணிக்கு சென்றடையும். அதேபோல் மாலை ஆறு மணிக்கு சென்னை கடற்கரை ஸ்டேஷனில் புறப்பட்டு ரயில் 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்து அடையும். திருவண்ணாமலையிலிருந்து பேருந்துகளில் செல்லும் பயணிகள் போளூர் கட்டணம் 30 ரூபாயும், வேலூர் செல்ல அரசு பஸ்களில் இரண்டு விதமாக கட்டணங்களில் 58 முதல் 75 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் வரையில் 150, அல்ட்ரா டீலக்ஸ் 180, ஏசி பஸ் 190 என வசூல் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
இதுகுறித்து பொதுமக்களிடம் பேசுகையில்  
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் பேருந்தில் மட்டுமே செல்ல முடியும்,  சென்னையில் தங்கி வேலை செய்ப்பவர்கள் பெரும்பாலன மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தினரே வசித்து வருகின்றனர். குறிப்பாக ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், வண்ணாரபேட்டை, ராயபுரம் பகுதியில் உள்ளனர். இவர்கள் தற்போது தாங்கள் இருக்கும் பகுதிக்கு செல்லவேண்டும் என்றால்  கிளம்பாக்கம் சென்று அங்கிருந்து மாற்று பேருந்துகள் மூலம் செல்லவேண்டியுள்ளது. இதனால்  நீண்டநேரம் பயணம் ஆகின்றது. அதனால் தற்போது இயக்கவுள்ள மின்சார ரயில் தங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும், மேலும் எங்களுக்கு சென்று வருவத்றகு இந்த ரயிலின் நேரமும் ஏதுவாக உள்ளது என்றும் , திருவண்ணாமலை ,போளூர் , கண்ணமங்கலம் போன்ற கிராம பகுதியில் உள்ள குடும்பத்தினர் தங்களுடைய குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்கு  சென்னை கடற்கரை சென்று வருவதென்றால் 3000 முதல் 5000 ரூபாய் வரையில்  செலவு ஆகும் என்பதால் பல்வேறு குடும்பத்தினர் செல்லமுடியாமல் இருந்து வருகின்றனர். தற்போது  சென்னை கடற்கரைக்கு புதியதாக இயக்கப்படும் ரயிலில் சென்று வருவதற்கு 500 முதல் 1000 ரூபாய் வரை குறைவான செலவே ஆகிறதால், அனைத்து குடும்பத்தினரும் சென்று வருவோம். இந்த கோடை விடுமுறை தன்னுடைய பிள்ளைகளுடன் சென்னை கடற்கரை சென்று வருவோம் என்று தெரிவித்தனர். 

மேலும் காண

Source link