Tamilnadu special buses will be operates on the occasion of Mukurtham and weekends from 26th April to 27 2024 | TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள்


TN Special Buses:  முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 26.04.2024, 27.04.2024, 28.04.3034 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முகூர்த்த தினம், வார இறுதிநாள் அகியவற்றை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்
இது தொடர்பான வெளியான அறிவிப்பில், “ 26/04/2024 (வெள்ளிக்கிழமை முகூர்த்தம்) 27/04/2024 (சனிக்கிழமை) மற்றும் 28/04/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 26/04/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 280 பேருந்துகளும், 27/04/2024 (சனிக்கிழமை) 355 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 26/04/2024 மற்றும் 27/04/2024 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 26/04/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 280 பேருந்துகளும் மற்றும் 27/04/2024 (சனிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும் சனிக்கிழமை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

மேலும் காண

Source link