TN Weather Update: தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்:
கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாது அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் இந்த வெப்பநிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரொட்டில் 38.6 டிகிரி செல்சியஸும் கரூரில் 37 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 33.1 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் சொல்லவது என்ன?
03.03.2024 முதல் 09.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
03.03.2024 முதல் 05.03.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த ‘அணு ஆயுதம்’
Polio Camp: இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. பெற்றோர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
மேலும் காண