Akshayakalpa: ஐ.டி வேலை டு ஆர்கானிக் ஃபார்மிங்; 6 முறை திவால்- இன்று ஆண்டுக்கு ரூ.600 கோடி வருமானம்!

[ad_1]

கர்நாடகாவைச் சேர்ந்த சாப்ஃட்வேர் இன்ஜினீயரான சசிகுமார், அமெரிக்காவில் உள்ள விப்ரோவில் வசதியான ஐ.டி வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்த சசிகுமார் பட்டப்படிப்புக்குப் பிறகு, விப்ரோவில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் அமெரிக்காவில் தனது வேலையை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு உதவ தொடங்கியுள்ளார்.

விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பால்பண்ணை தொடங்கினார். முதல் 9 ஆண்டுகளில், அவர் 6 முறை திவால் நிலைக்குச் சென்றார். இதையடுத்து தன்னுடைய மனைவியின் ரூ.30 லட்சம் சேமிப்பின் உதவியுடன், தொழிலை தொடர்ந்தார்.

ஒவ்வொரு முறை சறுக்கலின்போதும் தொடர்ந்து போராடினார். இதன் மூலம் இன்றைக்கு `அக்ஷயகல்பம்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி 2800 விவசாயிகளின் வாழ்க்கைக்கு துணை புரிந்து வருகிறார்.

அக்ஷயகல்பாவில் உள்ள 2,800 விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1.28 லட்சம் வழங்கி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.480 கோடியை விவசாயிகளுக்கு கொடுக்கிறார். விவசாயிகள் மாடுகளை வளர்த்து பாலை இவரின் நிறுவனத்துக்கு விற்பதன் மூலம் இந்த அளவுக்கு வருமானம் ஈட்டி வருகின்றனர். அதோடு சசிகுமாரும் மாதம் ரூ.60 கோடி வீதம் இன்று ஆண்டுக்கு ரூ.600 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். ரூ.60 கோடி என்பது லாபம் ஆகும். பால், நெய், பாலாடை கட்டி, பட்டர், தயிர், மோர், பிரட், தேன், முட்டை, தேங்காய், தேங்காய் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வாழைப்பழம் போன்ற பல உணவுப் பொருள்களை இயற்கை முறையில் தயாரித்து அல்லது உற்பத்தி செய்து அல்லது விவசாயம் செய்து விற்பனை செய்து வரும் சசிகுமார், தனது வெற்றிக்கதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தற்போது சசிகுமார் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் பண்ணை வைத்திருக்கிறார்.

பசுக்களில் இருந்து சுத்தமான பால் எடுப்பதற்காக ரசாயன உரம் மூலம் விளைவிக்கப்பட்ட கால்நடைத்தீவனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட தீவனங்களையே மாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். மாடுகள் சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வளர்க்கப்படுகின்றன. பால் கறக்க கைகள் பயன்படுத்தப்படுவதில்லை. மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டால், அவற்றை உடனே தனிமைப்படுத்தி ஆயுர்வேத முறையில் சிகிச்சை கொடுக்கின்றனர்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed