rajya sabha member p chidambaram briefed about congress election manifesto at sivagangai district | MP P Chidambaram Pressmeet: ” பாஜகவை போல் முரண்பட்ட கூட்டணியில் திமுக காங்கிரஸ் இல்லை”


மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ காங்கிரஸ் மற்றும் திமுக முரண்பட்ட கூட்டணியை அமைக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு எதிர் கருத்தை வரவேற்கிறேன். ஆனால் பாஜக இதில் உடன்பட மாட்டார்கள். ஃபெடரல் அரசு என்பதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. சிற்றரசு , பேரரசு என்பது தான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை.
ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது, கூட்டணியில் இருக்கும் பாமக ஆதரிக்கின்றது. இதுவே முரண்பட்ட கூட்டணி. ஆனால் எங்கள் கூட்டணி அப்படி கிடையாது.
நாயபத்திரா என்ற பெயரில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. நியாயம் நீதி என்பதை வலியுறுத்தி பல கருத்துக்கள், பல உத்திரவாதம் தரப்பட்டுள்ளது. சமூகநீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி என்று வெளியிடப்பட்டுளள்து. தேர்தல் அறிக்கை 10 அத்தியாயமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் 5 அத்தியாயங்கள் சமத்துவம், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 அத்தியாயம் அரசியல் சாசன காப்போம், பொருளாதார கொள்கை, அரசு முறை, தேசபாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள அவல நிலைமையை படம் பிடித்து காட்டி அதனை களைவோம் என்று உறுதி கோரிகிறோம். 100 நாள் வேலை திட்டம் நிறைவேருமா என்று சொன்னார்கள், உணவு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை செய்து காட்டியிருக்கிறோம். சந்தேக பேரொளிகள் தான் தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை நிறைவேற்ற முடியுமா என்று சந்தேகிப்பார்கள், நிறைவேற்ற முடியுமா என்று கேட்கப்பட்ட நிலையில்,  நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம், இதையும் நிறைவேற்றிக்காட்டுவோம்.
தமிழகத்தில் 39 இடங்கள் புதுச்சேரி 1 தொகுதி என 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.  தமிழகத்தை போன்று எல்லா மாநிலங்களிலும் இலவச கல்வி இல்லை எனவே 12ம் வகுப்பு வரை அனைத்து மாநிலங்களிலும் இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகளுக்கு ஈடாக எதாவது சாதனை சொல்ல முடியுமா.
IIT ல் படித்தவர்களில் 30 சதவீம் வேலை இல்லை. எனவே தான் கல்வி கடன் தள்ளுபடி அறிவித்திருக்கிறோம். கச்சத்தீவு ஒரு பிரச்சனை அல்ல எந்த திட்டத்தையும் செய்யாமல் தமிழகத்திற்கு வரும் மோடி எடுத்துள்ள ஆயுதம் தான் இது. என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று நான் பட்டியலை வெளியிடுகிறேன். அதற்கு பதில் பட்டியலை பிரதமர் மோடி வெளியிடுவாரா?” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link