Polio Camp: மக்களே இதை கவனியுங்கள்! 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.. எப்போது?

வரும் மார்ச் 3 ஆம் தேதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.

நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “ சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6 லட்சத்து 68 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நிரந்திர மையங்கள் 1,445, பஸ் நிலையம் மற்றும் இதர மையங்கள் 155, நடமாடும் மையங்கள் 46 என 3 மொத்தம் ஆயிரத்து 646 மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 7 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அண்டை நாடுகளில் போலியோ தாக்கம் இருப்ப தால் போலியோ நோய்கிருமி பரவும் அபாயம் உள்ளது. எனவே, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருக்க அடையாள மை வைக்கப்படும். குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக கொடுத்திருந்தாலும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் கொடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இடை வெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் போலியோவின் தாக்கம் இல்லாவிட்டாலும் பிறந்த குழந்தைகளுக்கு 9வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Source link