Lok Sabha Election 2024 MR Vijayabaskar collected votes on behalf of AIADMK for the Karur Parliamentary Elections – TNN | மதுபானத்திற்கு “வீரன்” என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர்


தமிழில் பெயர் வைக்கச் சொல்லும் காலம் போய் தற்பொழுது மதுபானத்திற்கு “வீரன்” என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என சிரித்துக் கொண்டே பேசினார்.
 
 

கரூர் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு அதிமுக சார்பில் பெரியார் நகர், அக்கரகாரம், ஜீவா நகர், காமராஜர் நகர், கோவிந்தம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். முன்னதாக பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பேசுகையில், “தமிழில் பெயர் வைக்கச் சொல்லும் காலம் போய் தற்பொழுது மதுபானத்திற்கு வீரன் என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர். வீரன் என்ற சரக்கு எப்படி இருக்கிறது  என்று குடிமகனிடம் கேட்ட போது பொழுது வீரமாக இருக்கிறது என்றும் சரக்கில் ஒரு விஷயம் இல்லை” என்று சிரித்துக் கொண்டே பேசினார். மேலும், முன்னாள் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் பெண்களுக்கு என்று  மதுபான கூடம் அமைத்த ஒரே அரசு இந்த திராவிட மாடல் அரசாங்கம்.
 
 

 
அதிமுக ஆட்சியில் ரூபாய் 350 கோடி புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்ட திறந்து வைக்கப்பட்டது. அன்று மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் தேவையாக இருந்தது. ஆனால் தற்பொழுது  திமுக ஆட்சி வந்த பிறகு போதிய அடிப்படை வசதி இல்லாத சூழ்நிலை உள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலு, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞனை செயலாளர் உள்ளிட்ட ஏனைய அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
 

 
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி புதுச்சேரி உட்பட தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பரப்புரையை திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இரவு பகல் பாராமல் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் தற்போது தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது.
 

 
 
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் இந்திய கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக ஜோதிமணி களம் காண்கிறார். அதை தொடர்ந்து அதிமுக சார்பாக தங்கவேல் என்பவரும், பாஜக சார்பாக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் என்பவரும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர் கருப்பையா என்பவரும் களத்தில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் அதிகப்படியான சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் தொகுதி திகழ்கிறது.
 
 
 
 

மேலும் காண

Source link