Lok Sabha Election 2024: 2 அரசும் சதிவேலைகளை செய்து சின்னத்தை பறித்துள்ளன – இயக்குநர் களஞ்சியம்

விழுப்புரம்: மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு சதிவேலைகளை செய்து நாம் தமிழர் கட்சியின்  சின்னத்தை பறித்துள்ளதாகவும் தன்னை தேர்ந்தெடுத்தால் விழுப்புரம் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் களஞ்சியம் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் பாராளுமன்ற தனித் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களஞ்சியம் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார். இந்நிலையில்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் களஞ்சியம் சென்னை புறவழிச்சாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களின் இரு சக்கர வாகனங்கள் புடை சூழ பிரச்சார வாகனத்தில் வந்து வாக்கு சேகரித்தபடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சியின்  சின்னம் பறிப்பு

விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியிடம் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தபின் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம், தன்னை தேர்ந்தெடுத்தால் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி  தருகிற வகையில்  தொழிற்சாலைகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பேன் என்றும்  வேண்டுமென்றே மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு சதிவேலைகளை செய்து நாம் தமிழர் கட்சியின்  சின்னத்தை பறித்துள்ளதாகவும், இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார். மேலும் காவல்துறையிடம் அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களுக்கு இருசக்கர வாகனத்திலும் தொண்டர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்ததால் இவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Source link