தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய கார்த்திக் தலையில் கட்டுடன் வீட்டுக்கு வர, அதை பார்த்து எல்லோரும் பதறுகின்றனர். தொடர்ந்து நாளைக்கு ஸ்பெஷல் கெஸ்ட் ஆக பல்லவி வருவதாக அதிர்ச்சி கொடுத்தான்.
தொடர்ந்து தீபாவின் பிறந்தநாள் பற்றி அவள் வீட்டுக்கு வந்ததும் கேள்வி கேட்ட கார்த்திக், “நாளைக்கு உங்களோட பிறந்தநாள்னு நீங்க சொல்லாமலே தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. உங்களுக்கு நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றும் கூறினான், இப்படியான பரபரப்பான கட்டத்தில் நேற்றைய எபிசோட் நிறைவடைந்த நிலையில், இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம்.
அதாவது, பர்த் டே பார்ட்டியில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை உடைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறான் கார்த்திக். பிறகு தீபா கார்த்திக்கியிடம் மன்னிப்பு கேட்க, அவன் உங்கள பெரிய பாடகியாக்கி காட்டறேன் என்று சொல்கிறான். 
அதன் பிறகு ஐஸ்வர்யாவை சந்திக்கும் மாயா, “நான் நட்சத்திராவின் தங்கச்சி, சிதம்பரத்தின் மனைவி” என அறிமுகம் செய்து கொள்கிறாள். “அந்த கார்த்தியை சும்மா விடக்கூடாது, எனக்கு உங்களுடைய உதவி தேவை” என்று சொல்ல, ஐஸ்வர்யா ரூபஸ்ரீயையும் இந்தக் கூட்டணிக்குள் சேர்த்து கொள்கிறாள்.
இதெல்லாம் முடிந்த பிறகு கார்த்திக் ஆபிசில் இருக்க, அங்கு வரும் மாயா “நான் நட்சத்திராவின் தங்கச்சி, உங்க வாழ்க்கையை சின்னாபின்னமாக ஆக்காமல் விட மாட்டேன்” என்று சவால் விடுகிறாள். இப்படியான பரபரப்பான கட்டத்தில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Sarpatta 2: நீயே ஒளி, நீதான் வழி.. சார்பட்டா 2ஆம் பாகத்துக்காக வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் ஆர்யா!
Anuya: “பெண்கள் ஃபோட்டோவை மார்ஃபிங் செய்யாதீங்க, நான் உயிருடன் இருக்க காரணம் என் குடும்பம்” – அனுயா வேதனை!

Source link


Latest News

View All

  1. Нужен СРО допуск? помощь в сро Арсенал-СРО помогает строительным, проектным и изыскательским организациям формить членство в СРО по всей России.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports