ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் ரியாவுடன் வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்க இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது அபிராமி அவனை அறைய வீட்டில் உள்ள எல்லோரும் ஆனந்தை நிற்க வைத்து கேள்வி கேட்க, “நீங்க யாரும் இந்த விஷயத்துல எதுவும் பேசக்கூடாது, அதுக்கான தகுதி உங்க யாருக்கும் கிடையாது” என சொல்கிறான்.

இதையடுத்து நான் மீனாட்சியிடம் பேசுகிறேன் என்று அவன் மீனாட்சியிடம் பேசப்போக, உடைந்து போயிருக்கும் மீனாட்சி அவனைக் கண்டுபிடித்து “இனிமே உன் கூட வாழ்றதுல எந்த அர்த்தமும் கிடையாது” என கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி எரிகிறாள். இந்த விரக்தியில் வீட்டை விட்டு வெளியேற தீபா அவளை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள்.

“இந்த நேரத்தில் நீங்க வீட்டை விட்டு வெளியே போனா அது சரியா இருக்காது. உங்க வீட்டுக்கு போனாலும் அவங்க விஷயம் தெரிஞ்சு ரொம்ப வருத்தப்படுவாங்க, நீங்க இந்த வீட்டுக்கு கூட வர வேண்டாம்” என அவுட் அவுஸ் அழைத்துச் செல்கிறாள். மீனாட்சி ஜானகியைப் பிடித்து கதற தீபா கீழே கிடக்கும் தாலியை எடுத்து பூஜை செய்து “மீனாட்சி அக்கா வாழ்க்கைல எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது, அவங்க பழையபடி ஒன்று சேர்த்து வாழணும்” என பிராத்தனை செய்கிறாள்.

இங்கு வீட்டில் அபிராமி ரூமுக்குள் ஆனந்த் செய்ததை நினைத்து வருத்தத்தில் இருக்க, அண்ணாமலை அபிராமியை தேற்ற முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் “இது என்ன புது ட்விஸ்ட், இத நமக்கு சாதகமா மாற்றிக்கணும்” என பிளான் போடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும்போது “இங்க ஆனந்த் யாரு?” எனக் கேட்டு “கட்டின பொண்டாட்டி இருக்கும்போது விவாகரத்து கூட வாங்காமல் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வரியா? மீனாட்சி தான் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க” என்று கைது செய்ய வந்திருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

இப்படியான நிலையில் இந்த வார கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்கள் நிறைவடைகிறது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Expand details https://acidcow.com/pics/174973-mobile-sports-and-entertainment-apps-in-2026-what-users-should-look-for.html
Узнать больше здесь: https://6may.org
Полная версия статьи: https://6may.org
Смотреть полный текст: https://6may.org
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Special report inside https://acidcow.com/user/Miguel+Herrero/