தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எடிட்டர் ரவியை கூட்டிட்டு வந்து உண்மையை நிரூபிப்பதாக சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ராஜேஸ்வரி எடிட்டரை தூக்கிவிட கார்த்திக் ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்துகிறான். ஆனால் ராஜேஸ்வரி இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று ட்ராமா போட, ரவி ராஜேஸ்வரி தான் தீபாவும் ரக்ஷனும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை அனுப்பி நியூஸ் போட சொன்னது என்ற உண்மையை ஆதாரத்துடன் நிரூபிக்கிறான்.

இதனால் அபிராமி அதிர்ச்சி அடைந்து “ஒரு பொண்ணோட வாழ்க்கையில இப்படி விளையாடி இருக்கீங்களே, இந்த வீட்டு சம்மந்தியா இருந்துட்டு நீங்க இப்படி செய்யலாமா?” என்ற கேள்வி கேட்க ஆளாளுக்கு ராஜேஸ்வரியை பிடித்து திட்டித் தீர்க்கின்றனர்.

கடைசியாக ராஜேஸ்வரி தப்பை ஒப்புக்கொண்டே மன்னிப்பு கேட்க, கார்த்திக் “அவர்களே உண்மையை ஒத்துக்கிட்,டாங்க கூட்டிட்டு போங்க” என்று போலீசை கூப்பிட்டு ராஜேஸ்வரி கைது செய்ய சொல்ல அபிராமி, “ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார் இந்த நேரத்துல இவங்கள கைது பண்ணா அது நல்லா இருக்காது” என சொல்லி ராஜேஸ்வரியை காப்பாற்றுகிறார்.

கார்த்திக் “தர்மலிங்க மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்குங்க, அவருக்கு ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விடமாட்டேன்” என வார்னிங் கொடுத்து விட, இன்ஸ்பெக்டர் “எனக்கு இதுல உடன்பாடு இல்லை, கார்த்திக் நீங்க சொல்றதுனால அவங்கள விட்டுட்டு போறேன்” என கிளம்பிச் செல்கிறார்.

பிறகு அருண் ராஜேஸ்வரி ரூமுக்கு வந்ததும், “ஏன் இப்படி எல்லாம் பண்ணி ஒவ்வொரு முறையும் கார்த்திக் கிட்ட அவமானப்பட்டு நிற்கிறீங்க. ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதினால் தான் நீங்க தப்பிச்சீங்க, இல்லனா உங்க கதி என்னவாகி இருக்கும்?” என திட்டுகிறான்.

அடுத்து தீபா கார்த்திக்கு போன் செய்து நான் “இன்னிக்கி ஹாஸ்பிடல் தங்கிடுறேன், நாளைக்கு வரும்போது எனக்கு ஒரு படம் மட்டும் எடுத்துட்டு வாங்க” என்று சொல்ல, கார்த்திக் கபோர்ட் திறந்து பார்க்க அதில் அவனது கல்யாணப் பத்திரிக்கையில் நட்சத்திராவின் பெயரை அழித்துவிட்டு தீபா என எழுதி இருப்பதை பார்த்து மீனாட்சியிடம் என்ன விஷயம் என்று கேட்க, “கல்யாணத்துக்கு முன்னாடி தீபாவுக்கு உங்க மேல காதல் இருந்தது, ஆனா அவ தான் அதை வெளியில் சொல்லல“ என்ற உண்மையை உடைக்கிறாள்.

அதுமட்டுமின்றி பெங்களூர் போயிருந்தபோது கோயிலில் தாலி வந்து தீபாவின் கழுத்தில் விழுந்த விஷயத்தையும் சொல்கிறாள். இதனால் கார்த்திக்கு தீபாவின் காதல் குறித்த விஷயம் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

Source link

Latest News

View All

1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed