கெணத்த காணோம் | Kenatha Kanom

 

ஜூன் மாத ரிலீஸாக அடுத்தடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் படங்களும், சீரிஸ்களும் வரவிருக்கின்றன. ஷேன் நிகமின் ‘த்ரிடம்’, யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’, கதிரின் ‘லிங்கம்’ வெப் சீரிஸ் என இம்மாதத்திற்கான ஹாட்ஸ்டார் லைன் அப்-களை இங்கு பார்ப்போம்.

த்ரிடம் (Dridam):

ஷேன் நிகம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் தினேஷ் பிரபாகர், கிருஷ்ணா பிரபா, மேத்யூ வர்கீஸ், சானியா பாத்திமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம், மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் ஜூன் 12-ம் தேதி வெளியாகிறது.

கெணத்தைக் காணோம் (Kenatha Kaanom):

யோகி பாபு நடித்திருந்த இப்படம் மார்ச் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபெக்கா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம், வருகிற ஜூன் 15-ம் தேதி வெளியாகிறது.

கெணத்த காணோம் | Kenatha Kanom

சேவ் தி டைகர்ஸ் சீசன் 3 (Save The Tigers Season 3)

‘சேவ் தி டைகர்ஸ்’ வெப் சீரிஸின் முதல் இரண்டு சீசன்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் ஜூன் 19-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. பிரியதர்ஷி புலிகொண்டா, அபினவ் கோமடம், கிருஷ்ணா சைதன்யா, ஜோர்டார் சுஜாதா, பவானி கங்கிரெட்டி, தேவயானி சர்மா, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் மூன்றாவது சீசனில் நடித்திருக்கிறார்கள்.

துக்ரா கே மேரா பியார் சீசன் 2 (Thukra Ke Mera Pyaar Season 2):

‘துக்ரா கே மேரா பியார்’ சீரிஸின் இரண்டாவது சீசனில் சஞ்சிதா பாஷு மற்றும் தவல் தாக்கூர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அனிருத் தவே, பாலக் ஜெயின் மற்றும் புனீத் சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸ் ஜூன் 19-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

லிங்கம் | வெப் சீரிஸ்
லிங்கம் | வெப் சீரிஸ்

லிங்கம் (Lingam):

கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி, சத்யா மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சீரிஸை எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த சீரிஸ் ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed