கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்?

[ad_1]

அன்னாபெல் லோமா என்ற பெண் இது குறித்து கூறுகையில், “எனது கணவர் பலமுறை பணியமர்த்தப்பட்டதை அடுத்து கடலில் குதிக்க முயன்றார். அவர் சோர்வாகவும், தன்னால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயமாகவும் இருப்பதாகக் கூறினார். அவர் வேலை போய்விடுமோ என்று பயப்படுகிறார்”‘ என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு மாலுமியின் மனைவி கூறுகையில், தனது கணவர் சக பணியாளர் ஒருவர் கடலில் குதிப்பதைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறினார்.

ஆபிரகாம் லிங்கன் கடந்த நவம்பர் 21ம் தேதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. முதலில் பசிபிக் நோக்கிச் சென்றது. ஆனால் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு, கப்பல் மத்திய கிழக்குக்கு திருப்பி விடப்பட்டது. அன்றிலிருந்து கப்பலில் இருக்கும் மாலுமிகள் குறைந்த நேரமே கரைக்கு வந்துள்ளனர். 5,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினர் இரண்டு நாள்கள் மட்டுமே தரையிறங்கியுள்ளனர்.

டிசம்பரில் குவாமில் ஒரு நிறுத்தமும் ஜூலையில் ஓமானில் மற்றொரு நிறுத்தமும் நிகழ்ந்துள்ளது. ஆரம்பத்தில் மே மாதத்தில் இக்கப்பலின் பணி முடிவடையும் என்று கூறப்பட்டது. மாறாக, போர் தொடர்வதால் அது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் இக்கப்பல் 5வது மாதமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கப்பல் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடைந்த கழிப்பறைகள், வாரக்கணக்கில் துணி துவைத்தல், வெந்நீர் இல்லாமை, அரை கப் அரிசி மற்றும் இரண்டு டார்ட்டிலாக்கள் என உணவு பற்றாக்குறை, சோப்பு, டியோடரன்ட் அல்லது டூத்பேஸ்ட் பற்றாக்குறையும் நிலவுகிறது என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மைக் லெவின் குறிப்பிட்டுள்ளார். இதனால் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நெருக்கடி முற்றி வருகிறது.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed