Iran Israel Clash: இந்தியர்களே உஷார்..! இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியது ஈரான் ஆதரவு அமைப்பு

Iran Israel Clash: ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பான ஹெஸ்பொல்லா கத்யுஷா ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ள்து.

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்:

ஈரான் ஆதரவு போராளிக்அள் அமைப்பான,  ஹெஸ்புல்லா இஸ்ரேலிய பீரங்கி தளங்கள் மீது டஜன் கணக்கான கத்யுஷா ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "டஜன் கணக்கான கத்யுஷா ராக்கெட்டுகளுடன் எதிரிகளின் பீரங்கி நிலைகளை குறிவைத்தோம்.  தெற்கு கிராமங்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் எதிரிகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. " என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் விளக்கம்:

தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லெபனான் பிரதேசத்திலிருந்து ஏறத்தாழ 40 ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் சில தடுத்து நிறுத்தப்பட்டன. காயம் ஏதும் ஏற்படவில்லை. முன்னதாக லெபனான் பிராந்தியதில் இருந்து வந்த ஹெஸ்புல்லா அமைப்பின் இரண்டு ஆளில்லா விமானங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தாக்குதல்கள்:

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ், தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியதில் இருந்து ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலிய ராணுவமும் அடிக்கடி எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருகின்றன. இது காஸாவில் மோதலுக்கு வழிவகுத்தது.  எல்லைக்கு அருகில் உள்ள பல கிராமங்களையும் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. போரின் விளைவாக லெபனானில் குறைந்தது 363 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஹெஸ்பொல்லா போராளிகள் ஆவர். பொதுமக்கள் 70 பேரும் இதில் அடங்குவர். இஸ்ரேல் தரப்பில் 10 ராணுவ வீரர்கள் மற்றும் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை:

பதற்றமான சூழலை தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே எப்போது வேண்டுமானலும் போர் தொடங்கும் சூழல் நிலவுகிறது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை அச்சுறுத்தியுள்ளது. அந்த நாடுகளில் ஏற்கனவே இருக்கும் இந்தியர்கள், தூரகங்களை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படைகளை அனுப்பும் அமெரிக்கா:

ஈரான் விரைவில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு படைகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்தவும், அமெரிக்க படைகளுக்கு படை பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கிய பின்னர் தெஹ்ரானில் இருந்து "பழிவாங்கும்" வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Source link