ஐபிஎல் 2024ல் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஐபிஎல் 2024ல் இதுவரை இரு அணிகளும் எப்படி..?

குஜராத் கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 4ம் தேதி (இன்று) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. குஜராத் அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 4 போட்டிகளில் 2 புள்ளிகள் பெற்று தற்போது 8வது இடத்தில் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக, கடந்த மார்ச் 26ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின் இந்த போட்டியில் களமிறங்குகிறது.

சுப்மன் கில் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங்கில் வலுவாகவே உள்ளது. ஆனால், பந்துவீச்ச்சாளர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்படுவது அவசியம். ஏனெனில், ரஷித் கானை தவிர, வேறு எந்த பந்துவீச்சாளர்களும் இன்னும் சிறப்பாக எதையும் செயல்படுத்தவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த மார்ச் 23ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர்ந்து, கடந்த மார்ச் 25ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த போட்டியில் களமிறங்குகிறது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

குஜராத் மற்றும் பஞ்சாப் இதுவரை 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத் அணி 2 போட்டிகளிலும், பஞ்சாப் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். பொதுவாக, இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும். இங்கே வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் பாதியில் சிறப்பாக பந்துவீசி அசத்தலாம். அதேசமயம் ஸ்பின்னர்கள் தங்கல் யுக்திகளை சரிவர பயன்படுத்தினால் விக்கெட்கள் விழவும் வாய்ப்புண்டு.

இன்றைய போட்டியில் மழைக்கு வாய்ப்பா..?

அகமதாபாத்தில் வெப்பநிலை சுமார் 35 டிகிரியாக இருக்கும். இருப்பினும், போட்டியின் முடிவில் 31 டிகிரி வரை உயரலாம். ஈரப்பதம் 33%க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

குஜராத் டைட்டன்ஸ்:

1. விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), 2. சுப்மன் கில் (கேப்டன்), 3. சாய் கிஷோர், 4. டேவிட் மில்லர், 5. விஜய் சங்கர், 6. அஸ்மதுல்லா உமர்சாய், 7. ராகுல் தெவாடியா, 8. ரஷித் கான், 9. உமேஷ் யாதவ், 10. நூர் அகமது, 11. மோகித் சர்மா.

பஞ்சாப் கிங்ஸ்:

1. ஷிகர் தவான் (கேப்டன்), 2. ஜானி பேர்ஸ்டோ, 3. பிரப்சிம்ரன் சிங், 4. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 5. லியாம் லிவிங்ஸ்டோன், 6. சாம் குர்ரான், 7. ஷஷாங்க் சிங், 8. ஹர்பிரீத், 9. ஹர்ஷல் படேல், 10. ராகுல் சாஹர், 11. ககிசோ ரபாடா.