Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

ஃபகத் ஃபாசில்

ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஏப்ரம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் ஆவேஷம் . வெளியான 13 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த ஆண்டும் வெளியாகி 100 கோடி வசூலை எட்டியுள்ள நான்காவது படம் ஆவேஷம் . முன்னதாக பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் ப்ரித்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் ஆகிய மூன்று படங்கள் 100 கோடி வசூலை ஈட்டின.

மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் மிகவும் தனித்துவமான ஒரு நடிகராக பார்க்கப் படுகிறார் பகத் ஃபாசில். குறிப்பாக ஆவேஷம் படம் அவரை ரசிகர்களுக்கு அவரை புதிய பரிணாமத்தில் காட்டியுள்ளது என்று சொல்லலாம். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது ஒரு நடிகராகவும் , தயாரிப்பாளராகவும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் ஃபகத் ஃபாசில். இதில் பொதுவாக பெரும்பாலான நடிகர்கள் பேசுவதற்கு மாறாக பல கருத்துக்களை அவர் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சினிமாவைப் பற்றி பேசுவது எனக்கு பிடிக்காது

இந்த நேர்காணலில் அவர் “ எனக்கு சினிமாவைப் பற்றி பேசுவது பிடிக்காது. என் நெருங்கிய நண்பர்கள், மற்றும் என் மனைவியுடன் கூட நான் சினிமாவைப் பற்றி பேச மாட்டேன். சினிமா என்பது ஒரு சின்ன பகுதிதான் அதைத் தவிர்த்து வாழ்க்கையில் தெரிந்துகொள்வதற்கும் பேசுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதேபோல் ஒரு நடிகனாக என்னை ரசிகர்கள் கொண்டாடுவதை நான் விரும்பவில்லை. ரசிகர்கள் என் படங்களைப் பார்க்கலாம் அதுவும் நன்றாக இருந்தால் மட்டும் அவ்வளவுதான் . அதற்கு பிறகு என்னை மறந்துவிட்டு அவர்கள் வேறு எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.” என்று ஃபகத் ஃபாசில் கூறியுள்ளார்.

என் படங்களில் மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசில் மற்றும் நஸ்ரியா நஸிம் இணைந்து நடித்த படம் ட்ரான்ஸ் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படம் வரவேற்பைப் பெற்றாலும் இப்படம் எதிர்பார்த்த வசூலை எடுக்கவில்லை. இப்படத்தின் தோல்வி குறித்து பேசிய ஃபகத் ஃபாசில்  ‘ மதங்களை என்னுடைய படங்களில் கொண்டு வரக் கூடாது என்று நான் தீர்மானம் எடுத்தது இந்தப் படத்திற்கு பின் தான். மக்கள் பொழுபோக்குவதற்காக படங்களைப் பார்க்க நினைக்கிறார்கள். சில விஷயங்களை அவர்களால் படமாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ட்ரான்ஸ் படத்தில் மதம் தொடர்பான விழிப்புணர்வு ரீதியாக நிறைய விஷயங்கள் இருந்த இதனால் அந்தப் படத்தில் இருந்த பொழுதுபோக்கு அம்சம் குறைந்தது. அதனால் மக்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை. என்னுடைய படங்களில் மதத்தை மட்டும் தொடவே கூடாது என்று நான் ரொம்ப தீர்மானமாக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link