மக்களவை தேர்தல் நடைபெறும் நாளன்று விடுமுறையுடன் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மக்களவை தேர்தல்:
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான மனுதாக்கலானது, மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கியுள்ளனர்.
மக்களவை தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தேர்தலுக்கான வழிகாட்டு நடைமுறைகளையும் தீவிரமாக தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
ஊதியத்துடன் விடுமுறை:
இந்நிலையில், மக்களவை தேர்தல் நாளன்று, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேர்தல் தினத்தன்று விடுமுறையுடன் சேர்த்து ஊதியத்தையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வெளியூரில் வேலைக்காக சென்ற மக்கள், பணத்தை காரணமாக கொண்டு தேர்தலில் வாக்களிக்காமல் இருக்க கூடாது என்பதற்காக , இது போன்ற நடைமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
மக்களாட்சி என்பது மக்களே ஆட்சி செய்வது, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்வது. ஆகையால், மக்களாட்சி நடைமுறையான வாக்களிப்பதில் அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. அதனடிப்படையில், மக்கள் மக்களாட்சி நடைமுறையான வாக்களிப்பதில் ஏதேனும் தடைகள் இருந்தால், அதை களைவதும், வாக்களிக்க அனைவரையும் ஊக்குவிப்பதுமான செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்கிறது.
அதன் காரணமாக வரும் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளன்று விடுமுறையுடன் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும் என மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
Also Read: PM Modi: சேலத்தில் மதம் குறித்து பேசிய பிரதமர்! தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்!
Lok Sabha Election 2024: வடதமிழகத்தில் 2ஆம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ்! திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான்!