தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வரும் அபர்ணா தாஸ் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அபர்ணா தாஸ் 2018 ஆம் ஆண்டு வெளியான நஞ்சன் பிரகாஷன் என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் மனோஹரம் என்ற படம் மூலம் மலையாள ரசிகர்களிடையே பிரபலமானார். அபர்ணா தாஸை 2022 ஆம் ஆண்டு விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் தமிழுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அழைத்து வந்தார். இப்படம் பெரிய கேரக்டர் இல்லையென்றாலும் கவனிக்கத்தக்க நடிகையாக அறியப்பட்டார்.
#Aparnadas and #DeepakParambol getting Married❤️ pic.twitter.com/fQifEVXo5k
— heyopinions (@heyopinions) April 1, 2024
இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு கவின் இயக்கத்தில் வெளியான டாடா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் ஹீரோயினாக அபர்ணா தாஸ் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அபர்ணா தாஸூக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ள தகவல் கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடப்பாண்டில் நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கும், நடிகர் விவேக்கின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது. நடிகை வரலட்சுமிக்கு நிச்சயம் முடிந்துள்ளது. இந்த வரிசையில் அபர்ணா தாஸூம் இணைந்துள்ளார். இவர் மஞ்சும்மல் பாய்ஸ் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சையமான தீபக் பரம்போலை தான் திருமணம் செய்ய உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வசூல் வேட்டையாடிய மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் தீபக் நடித்திருந்தார்.
Deepak Parambol – Aparna Das getting married on April 24thBoth acted in the movie Manoharam pic.twitter.com/XOrbSONpao
— G!R! Яamki 💛🏆 (@giri_prasadh_r) April 2, 2024
தீபக் பரம்போல் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரின் திருமணம் ஏப்ரல் 24 ஆம் தேதி வடக்கஞ்சேரியில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபர்ணா நடித்த மனோஹரம் படத்தில் தீபக் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Prabhudeva Birthday : நடனத்தின் இலக்கணத்தை மாற்றியமைத்தவர்.. இந்தியாவின் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு பிறந்தநாள்
மேலும் காண