Coimbatore’s industrial sector expresses distress, likening the impact of unscheduled power cuts to a devastating blow-’அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் இடி விழுந்தது போல உள்ளது’–கோவை தொழில் துறையினர் வேதனை!


தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின் தடை காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை மின் தடை பிரச்சனை இல்லாமல் இருந்து வந்த தொழில் நகரமான கோவையிலும் கடந்த 2 நாட்களாக மின் வெட்டு தலைதூக்கி வருகிறது. முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொழில் பாதிப்பு ஏற்படுவதாக தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, “கடந்த பல நாட்களாக தமிழகம் எங்கும் மின் தடையால் பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். ஆனாலும்  கோவை மாவட்டத்தில் பெரிய பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தமிழகத்தில் மின்வெட்டு சரி செய்யப்பட்டதாக மின்சார வாரியமும், அமைச்சர்களும் தெரிவித்து வந்தனர். இந்த  நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக  அறிவிக்கப்படாமல் சில துணை மின் நிலையங்களில் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடம் வரை ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் மின் நிறுத்தமும், சில துணை மின் நிலையங்களில் ஒரு மணி நேரமும் முதல் இரண்டு மணி நேரம் மின் நிறுத்தம் என பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில் முனைவோர்களுக்கு பெரும் இடி விழுந்தது போல் ஆகி உள்ளது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Прописка в Москве интересует тех, кто планирует жить в столице постоянно или на длительный срок. Такой формат регистрации помогает официально…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports