Siddharth Aditi Rao Marriage: நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி தெலங்கானாவில் திருமணம்? பரவும் தகவல்!
பிரபல நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் நீண்ட நாள்களாக காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று இவர்கள் இருவரும் தெலங்கானாவில் ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த் – அதிதி இருவரின் திருமணம் குறித்த புகைப்படம் கூட இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Richa Pallod : விஜய் பட நடிகை இப்போ என்ன செய்றாங்க? ஷாஜஹான் ஹீரோயின் மறுபடி எண்ட்ரியா?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான ஒரு முகமாக மாறும் நடிகர் நடிகைகள் ஏராளம். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரிச்சா பலோட். 16 வயது முதல் மாடலிங் துறையில் ஈடுபட்டு ஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1991ம் ஆண்டு வெளியான ‘லாமே’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
Ilayaraja : கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை அட்டாக் செய்த இளையராஜா!
நிகழ்ச்சி ஒன்றில் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் அளித்த இளையராஜா ” கடவுள நான் எப்போ பாக்கல. கடவுள் கிட்ட கேட்க எனக்கு எந்த கேள்வியும் கிடையாது. எனக்கு ரொம்ப கஷ்டத்த கொடுத்தா நான் கஷ்டப்படுறத பார்த்து நீ சந்தோஷமா இருக்கியா எனக்கு அது போதும் அப்டினு எடுத்துப்பேன்” என்றார்.
Game Changer : ராம் சரண் பிறந்தநாளுக்கு ஷங்கரின் பரிசு.. வெளியானது கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடல்
இன்று ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் கதைக்கு ஷங்கரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேம் சேஞ்சர். ராம் சரண் , பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Dr Sethuraman : 1461 நாட்கள் , 4 ஆண்டுகள் கழிந்துவிட்டன.. கணவரை நினைவுகூர்ந்த உமா சேதுராமன்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. நேற்று மார்ச் 26-ஆம் தேதியோடு சேதுராமன் இறந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. அவரது நினைவை சுமக்கும் மனைவி உமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படி கூறியுள்ளார் ”நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 1461 நாட்கள் கடந்துள்ளன. நீங்கள் எங்களுடன் இல்லையென்றாலும் நம் குடும்பத்தின் பெரிய தூணாக என்றும் எங்களுடன் இருக்கிறீர்கள். நாங்கள் உங்களைப் பற்றி நினைக்காத நாள் இல்லை.
மேலும் காண