ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பாக்கியம் மற்றும் இசக்கியை சண்முகம் சேர்க்காமல் துரத்தி விட, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, சண்முகம் வீட்டுக்கு ஒரு பாட்டியை தூக்கி வந்து உட்கார வைக்க, “கனி வயசுக்கு வந்துட்டா செய்ய வேண்டியது செய்” என்று சண்முகம் சொல்ல, “அதலாம் நான் பாத்துக்குறேன், நீ போடா” என பாட்டி சொல்லிவிட்டு, கனி அதே துணியில் இருப்பதால் மஞ்சள் துணியை கட்ட சொல்லி சந்தனமெல்லாம் பூசி வாசல் பக்கம் உட்கார வைத்து மஞ்ச தண்ணி ஊத்தி சடங்கு செய்கின்றனர்.

பிறகு “தாய் மாமன் தான் குடிசை கட்டணும், எங்க தாய் மாமன்?” என்று கேட்க, சண்முகம் “அப்படி யாரும் இல்லை” என்று சொல்ல, பாட்டி “அம்மா மொறைன்னு ஒன்னு இருக்கு, அப்படித்தான் செய்யணும்” என்று சொல்ல, வெளியில் மேளதாளத்துடன் வெங்கடேஷ் வந்து “தாய் மாமா நான் இருக்கேன்” என்று சொன்னது அவன் கையால் குடிசை கட்டி கனியை உட்கார வைக்கின்றனர்.

மறுபக்கம் இசக்கி “கனியைப் பார்த்தே ஆகணும்” என அடம் பிடித்து உட்கார, பாக்கியம் எவ்வளவு சொல்லியும் கேட்காத காரணத்தினால் பிறகு இருவரும் கிளம்பி கனியை பார்க்க வருகின்றனர். இங்கே சடங்கு முடிந்து ரத்னா காபி கொடுக்க, வெங்கடேசன் தீட்டி வீட்டுல எப்படி சாப்பிடுவது என தயங்க, வெங்கடேஷ் “அதனால் என்ன இருக்கு நான் சாப்பிடுறேன்” என காபி வாங்கி குடிக்க, பரணி “ரத்தினா கையால கொடுத்தால் வெங்கடேஷ் வேணான்னு சொல்லுவாரா” என கலாய்க்கிறாள்.

பிறகு பரணி “கனி சடங்கு முடிந்ததும் ரத்னா கல்யாணத்தை பண்ணி முடிச்சிடலாம்” என்று சொல்ல. சண்முகம் “அதெல்லாம் எங்களுக்கு தெரியும், உன் வேலையைப் பாரு” எனக் கோபப்பட, “நானே கல்யாணத்தை பண்ணி வைப்பேன்” என சொல்கிறாள்.

அதன் பிறகு வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி பாக்கியம் மற்றும் இசக்கி இல்லாமல் இருப்பதைப் பார்த்து எங்க போனாங்க என்று கேட்க, சௌந்தரபாண்டி “மனசு சரியில்லன்னு கோயிலுக்கு போய் இருப்பாங்க” என்று சொல்ல, முத்துப்பாண்டி “திரும்பவும் சண்முகம் வீட்டுக்கு போயிருக்கவும் வாய்ப்பிருக்கு” என சொன்னதும் சௌந்தரபாண்டி, “ஆமா உங்க அம்மா போயிருந்தாலும் போயிருப்பாரு. உடனே நீ போய் என்னன்னு பாரு” என சொல்லி அனுப்புகிறார்.

இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.